இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் நடைபெறும் போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் ஆகிய தொடர்களில் இருந்து வெளியேறி இருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டும் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், புதிய காயம் இங்கிலாந்து மற்றும் ஆர்ச்சருக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியில் விலகிய வில்லியம்சன் - சன்ரைசர்ஸூக்கு பின்னடைவு
27 வயதான ஆர்ச்சர் முழங்கை பிரச்சனை காரணமாக இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். அதில் இருந்து மீண்ட ஆர்ச்சர் தற்போது புதிய காயத்தினால் அவதிபட்டு வருகிறார். இங்கிலாந்து அணியுடன் மீண்டும் ஆர்ச்சர் திரும்புவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தற்போது மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். ஏற்கனவே லங்காஷயரின் சாகிப் மஹ்மூத் மற்றும் யார்க்ஷயரின் மாட் ஃபிஷர் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் காயத்தால் அவதிபட்டு வரும் நிலையில் ஆர்ச்சரும் காயத்தால் விலகி உள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
சமீபத்தில் ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் புதிய ஜெர்சியுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2022 ஏலத்தில் மும்பை அணி இவரை 8 கோடிக்கு வாங்கியது. காயத்தில் இருக்கும் ஆர்ச்சர் இந்த ஆண்டு விளையாட மாட்டார் என்று தெரிந்தும் மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறி இருந்தது.
மேலும் படிக்க | பெங்களூரா? டெல்லியா? பிளே ஆப்பிற்கு நுழைவது யார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR