IPL 2023 DC vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய மயாங்க் அகர்வால் விரைவாக வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா ரன்களை விரைவாக குவித்து ஸ்கோரை உயர்த்தினார். திரிபாரி 10, மார்க்ரம் 8, ப்ரூக் 0 என தொடர்ந்து ஹைதராபாத் விக்கெட்டை இழந்தாலும், அபிஷேக் சர்மா நிலையாக நின்று ரன்களை எடுத்தார்.
198 ரன்கள் இலக்கு
அவரும் 12ஆவது ஓவரில் 67(36) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில், 12 பவுண்டரிகள், 1 சிக்ஸரும் அடக்கம். அப்போது ஹைதராபாத் 109 ரன்களையே எடுத்திருந்தது. பின்னர், கிளேசானும், அப்துல் சமதும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் சமத் 28(21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் அகேல் ஹூசனும் தனது பங்குக்கு சிக்ஸரை பறக்கவிட ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. கிளேசன் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சால்ட் - மார்ஷ் மிரட்டல்
இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணிக்கு, முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஷ்வர் வீசிய 2ஆவது பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இருப்பினும், அடுத்து வந்த மார்ஷ், பில் சால்ட் உடன் ஜோடி சேர்ந்து ஹைதராபாத் பந்துவீச்சை சிதறடித்தார். இந்த ஜோடி, சுமார் 11 ஓவர்களில் 112 ரன்களை குவித்தது. சால்ட் 59(35), பாண்டே 1(3), மார்ஷ் 63(39) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாற தொடங்கியது. பிரியம் கர்க் 12(9) ரன்களுக்கும், இம்பாக்ட் சப் ஆக வந்த சர்ஃப்ராஸ் கான் 9(10) ரன்களுக்கும் ஆட்டமிழந்து டெல்லிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர்.
The Delhi Capitals came close to the target but it's @SunRisers who emerge victorious in Delhi#SRH register a 9-run victory over #DC
Scorecard https://t.co/iOYYyw2zca #TATAIPL | #DCvSRH pic.twitter.com/S5METD41pF
— IndianPremierLeague (@IPL) April 29, 2023
அக்சர் படேல் போராட்டம்
கடைசிக்கட்டத்தில், அக்சர் படேல் மட்டும் சற்று போராடினாலும் அவரால் இலக்கை எட்ட இயலவில்லை. இதனால், டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியைடந்தது. மார்க்கண்டே 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், அஹேல் ஹோசைன், நடராஜன், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். உம்ரான் மாலிக் ஒரே ஓவரை மட்டும் வீசி 22 ரன்களை கொடுத்தார்.
In Match of #TATAIPL between #DC & #SRH
Here are the Upstox Most Valuable Asset & Herbalife Active Catch of the match award winners.@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia pic.twitter.com/yq6rR94Q9c
— IndianPremierLeague (@IPL) April 29, 2023
புள்ளிப்பட்டியல்
கடந்த 24ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தது. அந்த தோல்விக்கு பதிலடியாக டெல்லியை வீழ்த்தி ஹைதராபாத் பழிதீர்த்தது. இதனால், ஹைதராபாத் அணி 6 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், டெல்லி 10 இடத்திலும் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ