IPL 2022 CSK vs MI: ஜடேஜாவிற்கு மாற்று வீரர் யார்?

ஐபிஎல் 2022 போட்டியில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.  

Written by - RK Spark | Last Updated : May 12, 2022, 02:11 PM IST
  • காயம் காரணமாக ஜடேஜா விலகல்.
  • முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
  • இன்று சென்னை மும்பை அணியுடன் விளையாடுகிறது.
IPL 2022 CSK vs MI: ஜடேஜாவிற்கு மாற்று வீரர் யார்? title=

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனின் 59வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் 2022 புள்ளிகள் அட்டவணையில் 11 ஆட்டங்களில் நான்கு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகள் உட்பட எட்டு புள்ளிகளுடன் சென்னை தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் கடைசியாக 33வது போட்டியில் சந்தித்தபோது சிஎஸ்கே மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக சென்னை அணி எப்படி களமிறங்குகிறது என்பதுதான் சென்னை அணிக்கு முக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?

ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் சென்னை அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக சிறிது போட்டியில் சொதப்பினாலும்,  இறுதியாக ஃபார்மிற்கு வந்துள்ளார்.  மற்றோரு வீரரான டெவோன் கான்வே சென்னை அணிக்காக அற்புதமான ஃபார்மில் இருந்து வருகிறார் மற்றும் டெல்லிக்கு எதிராக 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். மும்பை அணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிவம் துபே ஆல்-ரவுண்டராக சென்னை அணியில் முக்கிய இடத்தில் உள்ளார்.  தனது அதிரடி பேட்டிங்கில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மூத்த வீரர்களான அம்பதி ராயுடு மற்றும் உத்தப்பா இக்கட்டான நேரங்கில் அணிக்கு பேட்டிங்கில் உதவி உள்ளனர்.  மும்பைக்கு எதிராக நல்ல பேட்டிங்கை வைத்துள்ள ராயுடுவை சிஎஸ்கே நம்பி உள்ளது.  கடந்த சில போட்டிகளில் உத்தப்பாவிற்கு பேட்டிங் கிடைக்கவில்லை.  இன்றைய போட்டியில் கிடைக்கும் பட்சத்தில் தனது அதிரடியை காட்ட தயாராக உள்ளார்.  மொயீன் அலியின் பங்களிப்பு சென்னை அணிக்கு முக்கிய ஒன்றாக உள்ளது.  கடந்த போட்டியில் சிறப்பாக விக்கெட்களை வீழ்த்தி அணியை வெற்றி பெற செய்தார்.  

கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகிறார்.  முந்தைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை முடித்து கொடுத்தார்.  சென்னை அணியின் கேப்டனாக தோனி திரும்பியதில் இருந்து அணியில் வெற்றி பிரகாசம் அதிகரித்து உள்ளது.  டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி வரும் பிராவோ மும்பை அணிக்கு டப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி பவுலிங்கில் கலக்கி வருகின்றனர்.  இவர்கள் மும்பை அணியின் பேட்டிங்கை காலி செய்ய தயாராக உள்ளனர்.  

மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News