ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனையடுத்து இந்தியா ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. அதில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 192 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 13 ஓவர்களில் 94 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. சூர்யகுமார் யாதவின் அதிரடியால் அடுத்த 7 ஓவர்களில் இந்திய அணி 98 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமாரின் இந்த அதிரடி ஆட்டத்தை அடுத்து பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது இன்னிங்ஸ் குறித்து பேசுகையில், “ எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்யக் கூறினாலும் அதற்கு தகுந்தவாறு என்னை மாற்றிக்கொள்வேன். பயிற்சியாளர், கேப்டனிடம் என்னை எந்த பேட்டிங் வரிசையிலும் அனுப்புங்கள், ஆனால் விளையாடவிடுங்கள் என்று மட்டும் கூறியுள்ளேன்.
மேலும் படிக்க | அடுத்த தோனி ஹர்திக் பாண்டியாதான் - ஹர்பஜன் சிங் ஆரூடம்
ஹாங்காங் போட்டியில் முதலில் பேட் செய்வதற்கு ஆடுகளம் சவாலாக இருந்தது. முதலில் பேட் செய்யும் போது எந்த வகையிலான இலக்கை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து அதனை கொடுக்க முயற்சி செய்கிறோம். அணியில் ஒவ்வொருவரின் பங்கும் தெளிவாக உள்ளது. என் பணியை சிறப்பாக முடிக்க முடியாவிட்டால் ரிஷப் பண்ட் அதை செய்வார்.
Of two stellar knocks, a dominating partnership, mutual admirations & much more
Half-centurions @imVkohli & @surya_14kumar chat up after #TeamIndia's win against Hong Kong - by @ameyatilak
Full intervie #AsiaCup2022 https://t.co/Hyle2h3UBQ pic.twitter.com/39Ol62g2Qf
— BCCI (@BCCI) September 1, 2022
அவர் தவறினால் தினேஷ் கார்த்திக் செய்து முடிப்பார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையாடக் கூடியவர். முதல் இன்னிங்ஸில் தேவையான பலம் எங்களிடம் உள்ளது. களத்தில் விராட் கோலியுடன் உரையாடிய போது, வழக்கமான உனது ஆட்டத்தை விளையாடு என்று கூறினார். எனது திட்டம் தெளிவாக இருந்தது. ரசித்து விளையாடினேன்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ