Coca-Cola: பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோவின் கையசைவால் கவிழ்ந்த நிறுவனம்

கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர் கிறிஸ்டினோ ரொனால்டோ. அவருடைய ஒரு கையசைவு, பிரம்மாண்டமான நிறுவனத்தின் பங்கு மதிப்பையே சரித்துவிட்டது என்பது அவருடைய புகழை சொல்வதற்கு போதுமானது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 16, 2021, 04:36 PM IST
  • ரொனால்டோவின் கையசைவால் கவிழ்ந்த நிறுவனம்
  • கோகோ கோலாவின் பங்கு விலை. 56.10 முதல். 55.22 வரை குறைந்தது
  • யூரோ 2020 கால்பந்து போட்டியின் ஸ்பான்சர் நிறுவனம் கோகோ கோலா என்பது குறிப்பிடத்தக்கது
Coca-Cola: பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோவின் கையசைவால் கவிழ்ந்த நிறுவனம் title=

கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர் கிறிஸ்டினோ ரொனால்டோ. அவருடைய ஒரு கையசைவு, பிரம்மாண்டமான நிறுவனத்தின் பங்கு மதிப்பையே சரித்துவிட்டது என்பது அவருடைய புகழை சொல்வதற்கு போதுமானது. 

யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்ட ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை அகற்றி விட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று வலியுறுத்தி தண்ணீர் பாட்டிலை வைத்தார். இந்த ஒற்றை நிகழ்வு  யார் சொல்லிக் கொடுத்தாலும் புரியாத பாடத்தை மக்களுக்கு உணர்த்தியதாகவே தொன்றுகிறது. ஒரே நாளில் அவரின் மன விருப்பத்திற்கான பலனும் தெரிந்துவிட்டது. கோகோகோலா நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் திடீரென்று சரிந்துவிட்டது.

வாய் வார்த்தையாக இல்லை, சைகையால் அவர் உணர்த்திய செய்தி, கோகோ கோலா நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பீட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ரொனால்டோவின் கையசைவு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

போர்ச்சுகல் Vs ஹங்கேரி கால்பந்தாட்ட போட்டிகளுக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கோகோவுக்கு பதிலாக தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். இதனால், கோகோ கோலாவின் பங்கு விலை. 56.10 முதல். 55.22 வரை குறைந்தது.

Also Read | ரொனால்டோ Vs மெஸ்ஸி யார் பெரியவர் என்ற விவாதத்தை Piers Morgan தொடங்கியது ஏன்?

ரொனால்டோ தனது உடலை மிகச் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார். 36 வயதாகும் அவருடைய உடற்தகுதியே அவரின் திறமைக்கு ஆதாரமாக இருக்கிறது. தனது மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் போர்ச்சுகலின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள ரொனால்டோ வந்தார். அப்போது, கோகோ கோலாவின் இரண்டு பாட்டில்கள் அங்கு இருந்தது. யூரோ 2020 இன் ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்று என்றாலும், அவற்றை கேமரா கோணத்திலிருந்து முழுவதுமாக அகற்ற முடிவு செய்தார் ரொனால்டோ.

அதற்கு பதிலாக 'தண்ணீரைக் குடிக்க வேண்டும்' என்ற செய்தியை அவர் விடுத்ததால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தது. சர்வதேச கால்பந்து சூப்பர்ஸ்டாரின் அத்தகைய பரிந்துரை கோகோ கோலாவின் பிராண்ட் மதிப்பிலிருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை குறைத்துவிட்டது.

300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ரொனோல்டவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்கின்றனர். செவ்வாயன்று, ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகலுக்காக விளையாடிய ரொனால்டோ 3-0 என்ற கோல்களை அடித்து பல சாதனைகளை முறியடித்தார். 

Also Read | India WTC Final Squad: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News