பாஸ்பாலை கையிலெடுத்த ஜெய்ஸ்வால்... குஷியில் இந்தியா - என்ன செய்யப்போகிறது இங்கிலாந்து?

IND vs ENG 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 119 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்துள்ளது. ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2024, 05:37 PM IST
  • இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
  • அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டைகளை வீழ்த்தினர்.
  • ரோஹித் சர்மா அவுட்டானார்.
பாஸ்பாலை கையிலெடுத்த ஜெய்ஸ்வால்... குஷியில் இந்தியா  - என்ன செய்யப்போகிறது இங்கிலாந்து? title=

IND vs ENG 1st Test Day 1 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 119 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்துள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், கில் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ஜாக் லீச் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார். இந்திய அணியின் கேப்டன், ஒப்பனர்களுள் ஒருவரான ரோஹித் சர்மா 24 ரன்களுக்கு அவுட்டானார். 

முன்னதாக இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 246 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ரன்களை சேர்த்தார். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டி தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. அடுத்தடுத்த போட்டிகள் விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | கொரோனாவோடு டெஸ்டில் விளையாடும் வீரர்... அவர் செய்த சேட்டை இருக்கே - வீடியோவ பாருங்க!

இந்திய அணியின் 16 வீரர்கள் முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டன. இதில், விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு பதில் ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டார். ஏற்கெனவே, முகமது ஷமி இல்லாத நிலையில், விராட் கோலி, புஜாரா, ரஹானே என சீனியர்கள் யாரும் இல்லாமல் நீண்ட நாளுக்கு பின் இந்திய அணி களமிறங்கி உள்ளது. 

முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி மூன்று முழுநேர சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு முழுநேர வேகப்பந்துவீச்சாளர் என நான்கு முதன்மை பௌலர்களுடன் களமிறங்கியுள்ளது. ஸ்டோக்ஸ் பந்துவீச மாட்டார் என்பதால் ஜோ ரூட் பந்துவீச வாய்ப்புள்ளது. மார்க் வுட் மட்டும் வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.

இந்திய அணி தரப்பு பந்துவீச்சு லைன்அப்பில் அஸ்வின்  - ஜடேஜா - அக்சர் ஆகிய சுழற்பந்துவீச்சு கூட்டணியும், பும்ரா - சிராஜ் வேகக் கூட்டணியும் களமிறங்கின. பேட்டிங்கில் ரோஹித் - ஜெய்ஸ்வால் - கில் - கேஎல் ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர் - கேஎஸ் பரத் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். நம்பர் 9 வரை பேட்டிங் டெப்த் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். 
  
மேலும் படிக்க | அஸ்வின் மகத்தான சாதனை..! டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலர் என்ற அந்தஸ்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News