Tamannaah Bhatia With No Make Up : பிரபல நடிகை தமன்னா மேக் அப் இல்லாமல் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamannaah Bhatia With No Make Up : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்குபவர் தமன்னா. இந்தி திரையுலகிலும் இப்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை தமிழகத்தில் பலருக்கும் பிடிக்கும். மும்பையில் வசித்து வரும் அவர், மேக்-அப் இல்லாமல் இருக்கும் போட்டோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.
பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவரை திரையுலகிற்கு அறிமுகமானது ‘கேடி’ படம் மூலமாகத்தான்.
வட இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும், இவர் அதிகம் நடித்து வந்தது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்தான். ஆனால், இப்போது இந்தியில் அதிக வாய்ப்புகள் வருவதால் இவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
சமீப காலங்களாக, நடிப்பதோடு மட்டுமன்றி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். அதில் காவாலா பாடலும் அடக்கம்.
தமன்னா, இந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகரான விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமன்னா, எங்கு சென்றாலும் மேக்-அப் போட்டுக்கொண்டுதான் செல்வார். ஆனால், மும்பையில் சமீபத்தில் ஷாப்பிங்கிற்கு சென்ற இவர் மேக்-அப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
35 வயதாகும் தமன்னா, தற்போது ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.
தமன்னாவை மீண்டும் தமிழ் படங்களில் பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.