ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். வலுவான அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோத இருக்கின்றன. உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இரு அணிகளும் முதன்முறையாக சந்திக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகக்கோப்பை வெற்றிக்கு முட்டுக்கட்டைபோட்ட பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணியும் இருக்கிறது. போட்டிகள் அனைத்தும் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் பார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலியும் ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இருக்கின்றனர். முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. பும்ராவின் இடத்தை நிரப்ப ஆவேஷ்கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் என இரண்டு இந்திய இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் முனைப்புடன் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரோஹித் சர்மாவால் முறியடிக்க முடியாத விராட் கோலியின் 3 சாதனைகள்!
1. அவேஷ் கான்
துடிப்பான மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஆவேஷ்கான் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து இந்திய 20 ஓவர் அணிக்கு தேர்வாகியுள்ளார். இதுவரை 13 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிக்கனமாகவும், டெத் ஓவர் போன்ற நெருக்கடியான நேரத்தில் துல்லியமாகவும் ஆவேஷ் கான் பந்துவீசுவது பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.
2. அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப்பை சேர்ந்த அர்ஷ்தீப் சிங், துல்லியமான மற்றும் வித்தியமான பந்துகளை வீசி முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பார்வையில் சர்வதேச அளவில் ஜொலிக்கும் வீரர் என்ற பாராட்டுகளை பெற்றிருக்கிறார். பந்துகளில் வெரைட்டி மற்றும் வேரியேசன் அவரது பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் அர்ஷ்தீப் சிங், இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராகவும் மாறுவார் என கூறப்படுகிறது. இவர் ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். பும்ரா இல்லாத நிலையில், வாய்ப்பு கிடைக்கும்போது அந்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறார். 37 ஐபிஎல் போட்டிகளில் 26.35 சராசரியில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் அல்லாத புதிய கிரிக்கெட் தொடரில் தோனி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ