அங்கார யோகத்தால் கஷ்டப்பட்டு நஷ்டப்படப்போகும் 5 ராசிகள்: ராகு செவ்வாய் தோஷம்

Beware of Angaraga Yogam: அங்காரக் யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சங்கடமான காலகட்டம் தொடங்கவிருக்கிறது. ராகுவும் செவ்வாயும் கொடுக்கும் அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2022, 07:53 AM IST
  • மேஷத்தில் ராகுவும் செவ்வாயும் இணையவிருக்கின்றனர்
  • ராகுவும் செவ்வாயும் இணைந்தால் அங்காரக யோகம்
  • அங்காரக யோகத்தால் அவதிப்படப் போகும் ராசிகள்
அங்கார யோகத்தால் கஷ்டப்பட்டு நஷ்டப்படப்போகும் 5 ராசிகள்: ராகு செவ்வாய் தோஷம் title=

நமது வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் கிரகங்களில், சனி கிரகம் மிகவும் மெதுவாக நகர்வது. சனீஸ்வரருக்குப் பிறகு ராகு மற்றும் கேது கிரகங்கள் மெதுவாக நகர்பவை. ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றும் ராகு 2022 ஏப்ரல் 12ம் தேதியன்று மேஷ ராசிக்கு சென்றுள்ளார். மேஷத்தில் ராகு இருக்கும்போதே, செவ்வாயும் ஜூன் மாதம் மேஷ ராசிக்கு வந்துவிட்டார். ராகுவும் செவ்வாயும் மேஷத்தில் இணைந்திருப்பதால் அங்காராக யோகம் உண்டாகும். ஜோதிடத்தில் அங்காரக் யோகம் அமங்களமானதாக் கருதப்படுகிறது. எனவே இதை அங்காரக தோஷம் என்றும் சொல்லலாம். அங்காரக தோஷத்தால் 5 ராசிக்காரர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவர்கள். கஷ்டத்தை அனுபவிக்கவிருப்பதை தெரிந்துக் கொண்டால், அதை சமாளிப்பது எளிதாக இருக்கும். 

மேஷ ராசியில் ராகுவும் செவ்வாயும் ஒன்றாக இருப்பதால் ஏற்படும் அங்காரக யோக காலத்தில், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை மிகவும் ஆபத்தான காலமாக இருக்கும். ராகு, மேஷ ராசியில் 24.7 டிகிரியிலும் செவ்வாய் 24 டிகிரியிலும் சஞ்சரிக்கும் காலம் தான், மிகவும் கடினமான நேரம். ஆகஸ்ட் 11ம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து செவ்வாய் வெளியேறுகிறார்.

மேலும் படிக்க | கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சிக்கலில் சிக்கப் போகும் 3 ராசிகள்

ஆனால் அதுவரை கவனமாக இருக்க வேண்டும். அதிலும் ஆகஸ்ட் முதல் நாளில் இருந்து நான்காம் தேதி வரையிலான 4 நாட்கள் சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். ராகு-செவ்வாய் சேர்க்கை என்பது நெருப்பு, வெடிப்பு போன்றவற்றைக் கொண்டுவருவதால், இந்த ராசிக்காரர்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

அங்காரக யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் இவை தான்...  

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள், தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். சண்டை போடுவதை தவிர்க்கவும், வாகனங்களில் செல்லும்போது நிதானமாக இருக்கவும். நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | சந்திரனின் ராசியில் சூரியனின் பயணம்: அமாவாசை யோகக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

துலாம்: குடும்பத்தில், அதிலும் குறிப்பாக வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனைகள் வரலாம். வாழ்க்கை துணையுடன் வாய் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். வயிற்றில் பிரச்சனை ஏற்படலாம் என்பதால், உணவில் கவனமாக இருக்கவும்.  

ரிஷபம்: விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பயணங்களில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 4 நாட்களில் கவனமாக இருங்கள். எந்த விஷயத்திலும் பொறுமையாக செயல்படுவது நல்லது.

மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் தங்கள் சகோதரருடன் வாக்குவாதம் செய்யக்கூடாது. இல்லையெனில், உறவு மோசமடையக்கூடும். கையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, நிதானமாக செயல்படுவது நல்லது.
 
கடகம்: கடக ராசிக்காரர்கள் கோபத்தைத் தவிர்க்கவும். குறிப்பாக பணியிடத்தில் கோபப்பட வேண்டாம், கோபத்தை நிதானமாக கையாள்வது நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News