ஆடி மாத ராசி பலன் 2024.... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!

ஆடி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. அம்மன் வழிபாடு , கோயில் விழாக்கள் என பல சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்தில் இருந்து சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியில் நுழைய உள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2024, 03:27 PM IST
  • ஆடி மாதத்தில் ஏற்படும் சுக்ர-ஆதித்ய மற்றும் புத-ஆதித்ய ராஜயோகங்கள்.
  • நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கும் ஆசை நிறைவேறும்.
  • முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ஆடி மாத ராசி பலன் 2024.... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்... அதிர்ஷ்ட ராசிகள் எவை..! title=

ஆடி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. அம்மன் வழிபாடு , கோயில் விழாக்கள் என பல சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்தில் இருந்து சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியில் நுழைய உள்ளார். சூரியன் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசியில் சஞ்சரிக்க போகும் நிலையில், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இணைவதால் மிகவும் மங்களகரமான யோகம் உருவாகிறது. சூரியனும் புதனும் இணைவதால் புத்தாதித்ய யோகம் உருவாகும், அதே வேளையில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் சுக்ராதித்ய யோகமும் உருவாகிறது.

 சுக்ர-ஆதித்ய மற்றும் புத-ஆதித்ய ராஜயோக பலன்கள் 

ஆடி மாதத்தில் ஏற்படும் சுக்ர-ஆதித்ய மற்றும் புத-ஆதித்ய ராஜயோகத்தின் காரணமாக, 5 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். கடக ராசியில் சூரியன் பெயர்ச்சியினால் உருவாகும் இரட்டை ராஜயோகம் எந்தெந்த ராசிகளுக்கு பலன் அளிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசிக்கான ஆடி மாத பலன்கள் 

மிதுன ராசிகள் சூரிய பெயர்ச்சியினால் உருவாகும் இரட்டை ராஜயோகத்தின் சுப யோக பலன் காரணமாக ஆளுமை திறனில் முன்னேற்றம் ஏற்பட்டு, எல்லா வகையிலும் சிறந்து விளங்குவார்கள். அதிர்ஷ்டத்தின் காரணமாக பல காரியங்கள் எளிதில் நிறைவேறும். நீண்ட நாட்களாக வேலை மாற்றம் குறித்து எண்ணி வருபவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் மற்றும் சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மேலும் அனைத்து வகையான சவால்களையும் புத்திசாலித்தனமாக சமாளிக்கும் திறன் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு, நிலைமை மாறி அமைதியும் , வளமும் உண்டாகும்.

கடக ராசிக்கான ஆடி மாத பலன்கள் 

ஆடி மாதத்தில் சூரியனின் பெயர்ச்சியினால் உருவாகும் இரட்டை ராஜயோகத்தின் சுப பலன்களால், கடக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் எல்லா வகையிலும் பக்கபலமாக இருக்கும். சமூகத்தின் செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனளிக்கலாம். உங்கள் புத்திசாலித்தனம் மேம்படும். உங்கள் இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள். இரட்டை ராஜயோகத்தின் சுப பலன் காரணமாக, கடக ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். இதனால் பொருளாதார நிலை உயரும். இந்த காலகட்டத்தில், திருமணமாகாதவர்களுக்கு நல்ல உறவுகள் கைகூடும்.

மேலும் படிக்க | செவ்வாய்ப் பெயர்ச்சியால் ஏற்படும் குருமங்கள யோகத்தால் குபேரருக்கு நண்பராகும் 5 ராசிகள்!

கன்னி ராசிக்கான ஆடி மாத பலன்கள் 

சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் இரட்டை ராஜயோகத்தின் சுப பலன் காரணமாக, கன்னி ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். அதோடு, மதிப்பு மரியாதை உயரும். வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான முடிவுகளைக் காண்பார்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்து இருக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியுடன், உங்கள் பணிகள் அனைத்தும் எளிதாக முடிவடையும். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கும் ஆசை நிறைவேறும். முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசிக்கான ஆடி மாத பலன்கள் 

சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் சுப யோகத்தின் பலன் காரணமாக, துலாம் ராசிக்காரர்கள் பல வகையில் சுப பலன்களைப் பெறுவார்கள். முழுமையடையாத வேலைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் உயரும். இதனால், நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். சொந்தமாக வியாபாரம் செய்து வருபவர்கள், நல்ல பணம் சம்பாதித்து வெற்றிகரமான தொழிலதிபராக வெற்றி பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு நன்றாக இருக்கும். மேலும் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அனைத்து விதமான கவலைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்.

கும்ப ராசிக்கான ஆடி மாத பலன்கள்

ஆடி மாத சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் இரட்டை ராஜயோகத்தின் சுப பலன்களால், கும்ப ராசிகள் செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். மேலும் உங்கள் திறமை பாராட்டப்படும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் இருக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடிவடையும். மேலும் குடும்ப உறுப்பினரிடமிருந்து நல்ல செய்தியும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். உங்களின் சமூக வட்டம் அதிகரித்து, மதிப்பு மரியாதை உயரும். தாம்பத்திய வாழ்வில் உறவுகள் நல்லபடியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தாம்பத்திய சுகம் முதல் குழந்தை பிறப்பு வரை... சுக்கிரனால் விருத்தியாகும் சுக்கிலம்! வாழவைக்கும் சுக்கிரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News