மொத்த அணியும் காலி... RTM-ஐ நம்பி ஆர்சிபி - மெகா ஏலத்திற்கு பிளான் என்ன?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 தொடருக்கு வீரர்களை தக்கவைக்கும் விதிகள் மற்றும் மெகா ஏலத்தின் விதிகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மெகா ஏலத்திற்கு முன் ஆர்சிபி அணி யார் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஐபிஎல் மெகா ஏலம் (IPL Mega Auction) மீதான எதிர்பார்ப்பு முன்பை விட தற்போது விதிகள் வெளியான பின்னர் பன்மடங்கு அதிகரித்துள்ளது எனலாம். அதிலும் குறிப்பாக தற்போது கொடுக்கப்பட்டுள்ள விலை வகைமைகளில் அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்திற்கு முன் தக்கவைக்கும், எந்தெந்த வீரர்களை ஏலத்திற்கு போய் RTM பயன்படுத்தி தக்கவைக்கும் என்ற ஆர்வம் அதிகமாகி உள்ளது. அந்த வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணி யார் யாரை எப்படி தக்கவைக்கும் என்ற கணிப்பை இங்கு காணலாம். 

 
 
 
 
 
 
 
 
1 /8

ஐபிஎல் தொடரில் முக்கியமான அணிகளுள் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணி. ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது இல்லையென்றாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அணியாக திகழ்கிறது.   

2 /8

அந்த வகையில் தற்போது ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகளும், அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகளும் வெளியாகி உள்ள நிலையில், ஆர்சிபி அணி யார் யாரை எப்படி தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, அதுகுறித்த கணிப்புகளை இங்கு விரிவாக காணலாம்.   

3 /8

அதற்கு முன் விதிகளை சற்று சுருக்கமாக பார்ப்போம். ஒரு அணி ஏலத்திற்கு முன்னரோ அல்லது ஏலத்தில் RTM பயன்படுத்தியோ மொத்தமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். இந்த 6 வீரர்களில் அதிகபட்சமாக 5 Capped வீரர்களையும், அதிகபட்சமாக 2 Capped வீரர்களையும் எடுத்துக்கொள்ளலாம்.    

4 /8

ஏலத்திற்கு முன்னரே வீரர்களை தக்கவைக்க பிசிசிஐ ஆறு விலை வகைமைகளை அறிவித்துள்ளது. அதாவது, வீரர்களை தக்கவைக்க முதல் ஸ்லாட்டில் ரூ.18 கோடியும், இரண்டாம் ஸ்லாட்டில் ரூ.14 கோடியும், மூன்றாம் ஸ்லாட்டில் ரூ.11 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 4ஆவது ஸ்லாட்டில் ரூ.18 கோடியும், ஐந்தாவது ஸ்லாட்டில் ரூ.14 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி ஸ்லாட் Uncapped வீரருக்கானது. அதில் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5 /8

எனவே, ஒரு அணி ஏலத்திற்கு முன்னரே 6 வீரர்களையும் தக்கவைக்க வேண்டும் என்றால் இரண்டு வீரர்களை தலா ரூ.18 கோடிக்கும், இரண்டு வீரர்களை தலா ரூ.14 கோடிக்கும் தக்கவைக்க வேண்டும். மொத்தமாக ஐபிஎல் ஏலத்திற்கு முன் 6 வீரர்களை ஒரு அணி தக்கவைத்தால் மொத்தம் ரூ. 120 கோடி ஏலத்தொகையில் ரூ.79 கோடியை செலவிட வேண்டும். மீதம் உள்ள ரூ.41 கோடியில்தான் மற்ற வீரர்களை அணிகள் எடுக்க வேண்டிய நிலை வரும்.   

6 /8

அதுமட்டுமின்றி ஒரு அணியால் இரண்டு வீரர்களை ரூ.18 கோடி கொடுத்து தக்கவைக்கவே இயலாது. பல அணிகளில் அந்தளவிற்கு மதிப்பு வாய்ந்த வீரர்கள் இருக்கமாட்டார்கள். எனவே, அவர்களை ஏலத்திற்கு விடுவித்து அங்கு RTM மூலம் தக்கவைத்துக்கொள்ளலாம். பல அணிகள் RTM ஆப்ஷனை நம்பிதான் இருக்கும். அதாவது, ஏலத்திற்கு முன் மூன்று பேரை மட்டும் தக்கவைக்கிறீர்கள் என்றால் மீதம் உள்ள மூன்று வீரர்களை RTM பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம்.   

7 /8

அதே கதைதான் ஆர்சிபிக்கும். ஆர்சிபியை பொறுத்தவரை விராட் கோலி, முகமது சிராஜ், ரஜத் பட்டிதார், பாப் டூ பிளேசிஸ், வில் ஜாக்ஸ் அல்லது மேக்ஸ்வெல் ஆகிய ஐந்து Capped வீரர்களை தக்கவைக்க நினைக்கும். Uncapped பிரிவில் வைஷாக் விஜயகுமார் அல்லது கரன் சர்மாவை தக்கவைக்க நினைக்கும். புதிய Uncapped விதியின்கீழ் கரன் சர்மாவும் Uncapped வீரராக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்.   

8 /8

இதில் ஆர்சிபி ஏலத்திற்கு முன் விராட் கோலியை ரூ. 18 கோடிக்கோ அல்லது ரூ. 14 கோடிக்கோ நிச்சயம் தக்கவைக்கும். அதேபோல் சிராஜை ரூ.14 அல்லது ரூ.11 கோடி கொடுத்து ஏலத்திற்கு முன் தக்கவைக்கும். மற்ற வீரர்களையெல்லாம் நிச்சயம் ஆர்சிபி ஏலத்திற்கு விடுவித்து, RTM மூலம் ஏலத்தில் கிடைக்கும் தொகைக்கு தூக்குவார்கள். டூ பிளேசிஸ் மற்றும் பட்டிதார் நிச்சயம் ரூ. 5-7 கோடிக்கும் மேல் போக மாட்டார்கள். வில் ஜோக்ஸ், மேக்ஸ்வெல்லையும் அதிக தொகை கொடுத்து தக்கவைப்பதற்கு பதில் ஏலத்தில் நல்ல தொகைக்கு எடுத்துவிடலாம் என்பதே ஆர்சிபியின் பிளானாக இருக்கும். எனவே, ஆர்சிபி மூன்று வீரர்களை ஏலத்திற்கு முன்பே தக்கவைத்துக்கொண்டு, 3 வீரர்களை RTM மூலம் எடுக்க நினைக்கும்.