திருமண தடைகள் நீங்க... வெற்றிகள் குவிய... உதவும் கோகிலா விரதம்...!

இந்து மதத்தில் விரதங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. இவை மனதையும் உடலையும் தூய்மை படுத்துகிறது. பெரும்பாலும் கடவுளை போற்றிப் பாடி மந்திரங்கள் மற்றும் துதிகளை உச்சரிப்பதன் மூலமும், உணவில் கட்டுப்பட்டை கடைபிடிப்பதன் மூலமும்  அனுசரிக்கப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2024, 04:21 PM IST
  • கோகிலா விரதம் அனுஷ்டிக்க வேண்டிய நாள்.
  • கோகிலா விரத நாளில் செய்ய வேண்டியவை.
  • கோகிலா விரத தினத்தின் அதிர்ஷ்ட ராசிகள்.
திருமண தடைகள் நீங்க... வெற்றிகள் குவிய... உதவும் கோகிலா விரதம்...! title=

இந்து மதத்தில் விரதங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. இவை மனதையும் உடலையும் தூய்மை படுத்துகிறது. பெரும்பாலும் கடவுளை போற்றிப் பாடி மந்திரங்கள் மற்றும் துதிகளை உச்சரிப்பதன் மூலமும், உணவில் கட்டுப்பட்டை கடைபிடிப்பதன் மூலமும்  அனுசரிக்கப்படுகின்றன. 

கோகிலா விரத பலன்கள்

கோகிலா விரதம் ஆஷாட மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பௌர்ணமி தினத்தில் பெண்களால் அனுசரிக்கப்படுகிறது.  திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் பொருத்தமான வரன்  கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த விரதம் திருமணத்தில் ஏற்படக் கூடிய தடைகளை நீக்குகிறது. அதேசமயம் திருமணமான பெண்கள் இதனை கடைபிடிப்பதால், கணவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும்.

கோகிலா விரதம் அனுஷ்டிக்க வேண்டிய நாள்

சிவன் மற்றும் அன்னை பார்வதிக்கு உகந்த கோகிலா விரதம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை கோகிலா விரதம்  நாளில் ரவியோகத்தின் சுப யோகமும் இணைவதால், இந்த அபூர்வ சேர்க்கையின் மூலம், இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. மன அமைதியும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. பெரும்பாலான விரதங்களை பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், வளமான வாழ்க்கைக்காவும் கடைபிடிக்கின்றனர்.

கோகிலா விரத நாளில் செய்ய வேண்டியவை

கோகிலா விரத தினத்தின்  சிவ பெருமான் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும், வாழ்க்கையில் வளங்களை கொண்டு வந்து சேர்க்கும். மேலும், கோகிலா விரத நாளில் பறவைகள் மற்றும் பசுவை வணங்குவது புனிதமாக கருதப்படுகிறது. குறிப்பாக காகத்தை வணங்க வேண்டும் என்று கூறப்படுகிறதுஇந்து மதத்தில் வழிபாடு என்பது, தெய்வங்கள் மற்றும் சிலைகளுக்கு மட்டும் இன்றி, விலங்குகள், பறவைகள், மற்றும் இயற்கை வளங்களை வழங்குவதையும் உள்ளடக்கியது. நாள் முழுவதும் பழங்களை மட்டும் சாப்பிடுவது சிறந்தது.

மேலும் படிக்க | உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!

கோகிலா விரத தினத்தின் அதிர்ஷ்ட ராசிகள்

மேலும், இந்த வருட கோகிலா விரத தினத்தில் உருவாகும் ரவி யோகத்தால்  5 ராசிகளுக்கு அனைத்தும் அனுகூலமாக இருக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

மேஷ ராசிக்கான பலன்கள்

வருமானம் உயரலாம். குடும்பத்தில் ஒருவரின் உறவு வலுப்பெறலாம். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் லாபம் ஈட்ட புதிய வாய்ப்புகள் கிடைக்கும், ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள்

முதலீடு மூலம் நல்ல வருமானம் இருக்கும். எதிர்காலத்தில் பெரிய லாபம் எதிர்பார்க்லாம்.  திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள்.

துலாம் ராசிக்கான பலன்கள்
 
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட காலமாக ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு வருபவர்கள் புகழ் அடைவார்கள். குடும்பத் தலைவரின் ஆரோக்கியம் மேம்படும். அலுவலக வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு  கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மகர ராசிக்கான பலன்கள்

தேர்வில் கடினமாக உழைத்த மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம். தொழிலதிபர் தனது தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார். சொத்து வாங்க உகந்த நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

மீன ராசிக்கான பலன்கள்

சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீடு வாங்கும்  விருப்பம் நிறைவேறும். அதிர்ஷ்டம் மற்றும் தெய்வங்களின் அருளால்,  நிதி நன்மைகளைப் பெறலாம். முதலீடு செய்த பணத்தில், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News