வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் தேர்வில், வழக்குகளில், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பது நிச்சயம். வீட்டில் வன்னி மரச்செடியை நடுவது மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தை கொண்டு வருவதோடு, எதிர்மறை ஆற்றலில் இருந்து பாதுகாக்கும். துளசி செடியைப் போலவே வன்னிச் செடியும் நன்மை பயக்கும். சனி தேவரின் அருளைப் பெற வன்னி மரத்தை வணங்குவது மிகவும் பலன் கொடுக்கும். அதோடு குபேரனின் ஆசியையும் பெறலாம்.
ஜோதிடத்தின் படி, ஒரு நபரின் வாழ்க்கையில் அனைத்து கிரகங்களின் தாக்கத்தையும் சுப மற்றும் அசுப வடிவில் காணலாம். இந்த கிரகங்களில், சனி கிரகம் கர்மத்திற்கு ஏற்ற பலனை கொடுக்கும் கிரகமாகும் இரண்டரை ஆண்டுகளில் சனி தனது ராசியை மாற்றி விடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது சனி திசையை எதிர்கொள்ள வேண்டும். ஜோதிடத்தில் சனியை மகிழ்விக்க பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் வன்னி மரத்தை வழிபடுவதும் அது தொடர்பான பரிகாரங்களும்.
இந்து மதத்தில் துளசி செடிக்கு சிறப்பு மத முக்கியத்துவம் உள்ளது. அதே போல் வன்னி மரம் மற்றும் செடியும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. துளசி செடியை போல, வன்னி மரச் செடி இருக்கும் வீட்டில், எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும். ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதன் இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம். அதோடு, தெய்வீகத் தன்மைகள் நிறைந்தது வன்னி மரம். பல சிவாலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம் தான்.
தெய்வங்கள் வழிபட்ட வன்னி மரம்
விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால், அங்கு வன்னி மரம் தான் தலவிருட்சம். ஸ்ரீராமன் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போவதற்கு முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். பஞ்ச பாண்டவர்கள் அனைத்தையும் துறந்து அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக, தங்கள் ஆடை அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் துணியில் கட்டி வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அதாவது, சிறந்த பாதுகாப்பை கொடுக்கும் மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம். அதனால் தான் இது வணங்கப்படுகிறது.
ஏழரை நாட்டு சனி
வீட்டில் வன்னி மரச் செடியை நட்டு வைப்பதால், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையும். எந்த வேலையிலும் ஏற்படும் தடைகள் நீங்கும். சனி தேவனின் பரிபூரண அருளையும் பெறலாம். குறிப்பாக ஏழரை நாட்டு சனி அல்லது சனி மகாதசையினால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக வன்னிச் செடியை வணங்க வேண்டும்.
மேலும் படிக்க | வக்ர சனி, ராகு - கேது: வரும் 6 மாதங்கள் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்
செல்வத்தை அள்ளித் தரும் வன்னி
வீட்டில் வன்னி மரச்செடி வைத்து வழிபட்டால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. அன்னை மகாலட்சிமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் சனி தேவனின் பர்பூரண அருளையும் பெறலாம். வீட்டில் வன்னி மர செடியை நட்டால் புண்ணியம் கிடைக்கும், பணத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது மத நம்பிக்கை. வன்னி மர செடியை நடும் போது விதிப்படி பூஜை செய்ய வேண்டும்.
வன்னி மரச்செடியின் பிற நலன்கள்
வன்னி மர செடியை வீட்டில் நடுவதன் மூலம் திருமண தடைகள் நீங்கும். திருமணம் தாமதமானால், வீட்டில் வன்னி மர செடியை நட்டு வழிபட வேண்டும், இவ்வாறு செய்வதால் திருமணத்தில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கும்.வாஸ்து சாஸ்திரத்திலும் வன்னி மர செடி மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டில் வன்னி மர செடியை நடுவதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கி வீட்டில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராது.
வன்னிமரச்செடியை நடும் முறை
வன்னி மரச் செடியை வீட்டில் எப்போதும் சனிக்கிழமை அன்றுதான் நட வேண்டும். இந்த செடியை வீட்டிற்குள் நடுவதற்கு பதிலாக தோட்டத்திலோ அல்லது பால்கனியிலோ நட வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இந்த செடி உங்கள் வலது பக்கத்தில் இருக்க வேண்டும். மொட்டை மாடியில் தெற்கு திசையில் வைப்பதும் நல்லது. வன்னி மரச்செடியை துளசியுடன் தினமும் வழிபட வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 4 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு சனியால் தொல்லை, மிகுந்த ஜாக்கிரதை தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ