புதன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, மார்ச் 31, 2023 அன்று, கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். புதன் வலுவிழந்த நிலையில், அதாவது நீச்சத்தில் மீன ராசியில் இருந்து வெளியேறி செவ்வாய் ராசியான மேஷ ராசிக்கு மாறப் போகிறார். புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தென்படும். இருப்பினும் புதனின் இந்த மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் புதன் பெயர்ச்சி நடைபெறப் போகிறது. இந்த பெயர்ச்சியின் மூலம் தைரியம் அதிகரிக்கும். அனைவருடனும் நன்றாக பழகும் வாய்ப்பு கிடைக்கும். வங்கி மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை மாறுவதற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இப்பணியில் முழு வெற்றி பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்கு பத்தாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இது கர்மாவின் வீடாகக் கருதப்படுகிறது. புதனின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுமட்டுமின்றி, பணியிடத்தில் பணி பாராட்டப்படுவதோடு மட்டுமல்லாமல், புதிய பொறுப்புகளும் வழங்கப்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் தாயின் உடல்நிலை நன்றாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் உருவாகும் விபரீத ராஜயோகம் பண ஆதாயத்தைத் தரும். வருமானம் அதிகரிக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம்.
கும்பம்
ஜோதிட சாஸ்திரப்படி புதன் கும்ப ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது வலிமையின் ஸ்தானமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் ஒரு ஆன்மீகப் பயணத்தை மெற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு நன்மை பயக்கும். இதனுடன், உங்கள் அதிர்ஷ்ட வீட்டில் புதனின் அம்சம் காரணமாக, நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வணிக வகுப்பினருக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். மறுபுறம், நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ