இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் எளிதில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஆற்றில் அடித்து செல்லப்பட இருந்த தனது குட்டியை தாய் யானை போராடி காப்பாற்றிய வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.
யானை மிகவும் மென்மையான மற்றும் அமைதியான விலங்கு, இதன் காரணமாக பலருக்கும் பிடித்த விலங்காக உள்ளது. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு குட்டி யானை தண்ணீரின் வலுவான நீரோட்டத்தில் அடித்து செல்லத் தொடங்குவதைக் காணலாம். இதற்குப் பிறகு தாய் யானை செய்த காரியம் உங்கள் உணமையில் வியப்பில் ஆழ்த்தும்.
வேகமாக ஓடும் ஆற்றை யானைக்கூட்டம் கடப்பதை வைரல் வீடியோவில் காணலாம். யானைகள் ஓடும் ஆற்றை கடக்கும்போது, பெரிய யானைகள் மிக எளிதாக வெளியேறி சென்ற நிலையில், ஒரு குட்டி யானை தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை வீடியோவில் காணலாம். இதைப் பார்த்த தாய் யானை அவனை நோக்கி வேகமாக ஓடி வந்து காப்பாற்ற முயற்சிக்கிறது. ஆனால், தண்ணீர் பாயும் வேகம் அதிகமாக இருந்ததால், குட்டி யானை சிறிது அடித்துச் செல்லப்பட்டது.
காணொளியில் காணும் காட்சி மிகவும் பீதியை கொடுப்பதாக உள்ளது. நீர் ஓட்டம் மிக வேகமாக இருப்பதை வீடியோவில் காணலாம். இந்த சூழ்நிலையில் குட்டி யானை தாக்குபிடிக்க முடியாமல் தண்ணீருடன் சேர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது. தாய் அவனைக் காப்பாற்ற வரும்போது, தனது முழு பலத்தையும் கொண்டு முயன்றாலும், முதலில் தோல்வி அடைந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு நிற்கும் மற்ற யானைகள் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தன. அதன் பிறகு, பெரிய யானை அந்த குட்டி யானையை காப்பாற்றுகிறது.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
யானையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
அன்னையின் அன்பு மக்களின் மனங்களை வென்றது
அந்த காணொளி மக்களின் மனதை கொள்ளை கொள்கிறது. அந்த காணொளியில் யானைகளின் ஒற்றுமையையும், அன்னையின் அன்பையும் பார்த்து சமூக வலைதளவாசிகள் வெகுவாக பாராட்டுகின்றனர். elephants_.world என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ள இந்த வீடியோ இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR