கடந்த ஏழு மாதங்களாக, ஆந்திராவில் உள்ள ஒரு துணி கடைக்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்த செல்கிறார். அவரை யாரும் தடுப்பதில்லை, காரணம் அவர் வந்து செல்வதற்கான நோக்கும் அனைவராலும் மதிக்கப்படுவதால்...
இந்த சிறப்பு விருந்தினர் எதற்காக இந்த கடைக்கு தினம் வந்த செல்கின்றார். அவர் வருவதன் நோக்கம் என்ன?... என்பதை விளக்கும் வகையில் தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியாவில் பசு ஒன்று ஆந்திராவில் உள்ள ஒரு துணி கடைக்கு தினம் சென்று காற்று வாங்கி வருவது நமக்கு தெரிகிறது.
இந்த வீடியோவில் காட்சி படுத்தப்பட்டுள்ளதாவது., துணி வாங்க வந்த வாடிக்கையாளர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருக்க, பசுவோ மெத்தையில் அமைதியாக அமர்ந்து சூழ்நிலையினை ரசிக்கிறது. மேலும் உச்சவரம்பு விசிறியின் குளிர் தென்றலை அனுபவிக்கிறது.
இந்த பசு குறித்த இந்த கடைக்கு வெயில் காலத்தின் துவக்கத்தில் வரத்துவங்கியதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பாலிமேரா ஒபய்யா ஆரம்பத்தில் பசுவை கடையின் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார், என்றபோதிலும் சில நாட்களில் அது கடையின் தினசரி விருந்தினராக உருமாறியுள்ளது.
There is a shop named saibaba cloth Store in Mydukur town in Kadapa district of Andhra Pradesh. For the last 6-7 months a cow regularly enters into this shop, sits for 2-3 hours under the fan and goes out without causing any nuisence to the shop or customers. @rvaidya2000 pic.twitter.com/DxjNMshKRT
— Adarsh Hegde (@adarshhgd) November 5, 2019
இந்த சிறப்பு விருந்தினரின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினை பார்த்த இணைய ரசிகர்கள் பலரும் தங்கள் வேடிக்கை கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.
Should appreciate the owner who is allowing it!
Great!— V Gopalan (@TheGopalan) November 6, 2019