இதைவிட விசித்திரமான வீடியோவை பார்த்திருக்கவே முடியாது... விமானத்தை பலர் தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விமானத்தை பலர் சேர்ந்து தள்ளும் வீடியோ நேபாளத்தில் உள்ள விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. நேபாளத்தின் பஜுரா விமான நிலையத்தில் (Bajura Airport) புதன்கிழமை தாரா ஏர் நிறுவனத்தின் (Tara Air plane) ஒன்றை பலர் தள்ளுகின்றனர்.
இதைப் பார்க்கும்போது, நமது கார் பழுதடைந்தால், அதைத் தள்ளி ஸ்டார்ட் செய்வோமே! அதைப்போல, விமானத்தை பலர் சேர்ந்து தள்ளி ஸ்டார்ட் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது (Passengers Push Airplane in Nepal). இந்த உலகில் எந்தவிதமான விநோதமும் சாத்தியம் தான் என்பதால், நம்ப முடியாத விஷயங்களும் நம்பத் தோன்றுகிறது.
விமானத்தை தள்ளும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது, அதில் பலர் ஒன்று சேர்ந்து விமானத்தை தள்ளுவதைக் காணலாம்.
நேபாள விமான நிலைய வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ தொடர்பாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பாஜுரா விமான நிலையத்தில் (Bajura Airport) தரையிறங்கும் போது விமானத்தின் பின்புற டயர் வெடித்தது. இதனால் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விமானத்தால் நகர முடியவில்லை.
விமான ஓடுபாதையை இந்த விமானம் ஆக்ரமித்துக் கொண்டதால், அடுத்து வந்த விமானத்தை ஓடுபாதையில் தரையிறக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், விமானத்தை, காரைப் போல தள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த பயணிகளும் அவர்களுடன் சேர்ந்து விமானத்தைத் தள்ளத் தொடங்கினார்கள்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோவைப் பார்த்து பலரும் பலவிதமாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
सायद हाम्राे नेपालमा मात्र होला ! pic.twitter.com/fu5AXTCSsw
— Samrat (@PLA_samrat) December 1, 2021
20க்கும் மேற்பட்டோர் இணைந்து ஐலசா!
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பாதுகாப்புப் பணியாளர்களுடன் சேர்ந்து சுமார் 20 பேர் விமானத்தை ஓடுபாதையில் இருந்து அகற்றுவதற்காக தள்ளுவதைக் காணலாம். இந்த வீடியோவைப் பகிர்ந்த ஒரு ட்விட்டர் பயனர், "இது நேபாளத்தில் மட்டுமே நடக்கும்" என்று எழுதினார். இதிலிருந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை (Viral Video) பார்த்து பலரும் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத்தைச் சேர்ந்த தாரா ஏர் விமான நிறுவனம், எட்டி ஏர்லைன்ஸின் சகோதர நிறுவனம் (subsidiary of Yeti Airline) ஆகும். இந்த வைரல் வீடியோவில் பதிவாகி இருக்கும் சம்பவம் குறித்து எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் விளக்கமும் அளித்துள்லார்.
தாரா ஏரின் 9N-AVE விமானம் பாஜுரா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, டயர் வெடித்தது. அப்போது மற்றொரு விமானம் தரையிறங்க தயாராகி கொண்டிருந்தது, ஓடுபாதையில் இடம் இல்லாததால் தரையிறங்க முடியவில்லை. எனவே, விமானத்தை அங்கிருந்து நகர்த்திச் செல்வதற்குத் தேவையான வாகனங்கள் எதுவும் விமானநிலையத்தில் இல்லை. இதன்காரணமாக விமான நிலைய அதிகாரிகளும் பயணிகளும் விமானத்தை நகர்த்த உதவினார்கள்.
’கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்ற பழமொழி இன்றும் பொருந்தும் நிதர்சன மொழியாக இருப்பதை உறுதி செய்யும் வைரல் வீடியோ இது.
ALSO READ | வைரலாகும் நாசாவின் விண்வெளி வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR