அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெங்களூரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தினை கர்நாடக திரையுலகின் பிரபலம் கார்த்திக் கௌடா படம்பிடித்துள்ளார்.
அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு குடும்பம், திடீரென விபத்துக்குள்ளாகிறது. அப்போது வாகனத்தை ஓட்டிய கணவன் மற்றும் அவரது மனைவி காற்றில் பறக்கின்றனர். ஆனால் இவர்களை விட்டு தனியாக செல்லும் அவர்களது இருசக்கர வாகனம், சுமார் 300 மீ தொளைவிற்கு அவர்களது குழந்தையினை பத்திரமாக கொண்டு சென்று அருகில் இருக்கும் புல்வெளியில் சேர்க்கின்றது.
இந்த வீடியோவானது பார்ப்பவர்களின் மனதை பதர வைக்கின்றது.
The bike rider had his family on the bike,hit a 2 wheeler & fell down with his wife.The impact of the hit was so much tat the bike went for 300m with d child on it before slowing down,kid fell on d grass unhurt. Recorded on my dashcam 2 hrs ago.Mirac @BlrCityPolice pic.twitter.com/MZFyRRGcAw
— Karthik Gowda (@Karthik1423) August 19, 2018