தனது திருமணத்தின் அழகான புகைப்படத்தை பகிர்ந்தார் Jasprit Bumrah, ரசிகர்களுக்கு நன்றி கூறினார்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திங்களன்று (மார்ச் 15) கோவாவில் நடந்த திருமண நிகழ்வில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மணந்தார். இந்த நிகழ்வில் COVID-19 தொற்றுநோய் காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தவிர மிகச் சில விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2021, 02:43 PM IST
  • இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் திருமணம் மார்ச் 15 அன்று நடந்தது.
  • தனது திருமண வரவேற்பின் படங்களை பகிர்ந்து கொண்டார் பும்ரா.
  • தன் மீதும் தன் மனைவி மீதும் காட்டிய அன்புக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தனது திருமணத்தின் அழகான புகைப்படத்தை பகிர்ந்தார் Jasprit Bumrah, ரசிகர்களுக்கு நன்றி கூறினார் title=

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திங்களன்று (மார்ச் 15) கோவாவில் நடந்த திருமண நிகழ்வில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மணந்தார். இந்த நிகழ்வில் COVID-19 தொற்றுநோய் காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தவிர மிகச் சில விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah), கோவாவில் நடந்த திருமண அழைப்பின் ஓரிரு படங்களை தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து கொண்டார். கடந்த சில நாட்களாக தனக்கும் தனது மனைவிக்கும் ரசிகர்கள் அளித்த அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் பும்ரா நன்றி தெரிவித்தார். 

IPL-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, கடந்த இரண்டு நாட்கள் கனவு போலவும், மேஜிக் நிறைந்ததாகவும் இருந்ததாக குறிப்பிட்டார். "கடந்த சில நாட்கள் மிகவும் நன்றாக இருந்தன. நீங்கள் காட்டிய அன்பிற்கும் தெரிவித்த வாழ்த்துகளுக்கும் நன்றி” என்று படத்தின் தலைப்பில் பும்ரா எழுதினார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

ALSO READ: Watch: வழுக்கை தலை அவதாரத்தில் MS Dhoni; வைரல் ஆகும் ஐபிஎல் 2021 விளம்பரம்

பும்ராவும் சஞ்சனா கணேசனும் மார்ச் 15 ம் தேதி நடந்த திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து, சமூக ஊடகங்களில் தங்கள் திருமணச் செய்தியை அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI பும்ராவுக்கு விடுப்பு வழங்கியது. தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடருக்கான 19 பேர் கொண்ட அணியிலும் வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படவில்லை.

பும்ரா மார்ச் இறுதிக்குள் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேருவார் என கூறப்படுகிறது. 27 வயதான பும்ரா, 2016 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமானதில் இருந்து 19 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 50 டி 20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். IPL 2021-க்கு முன்னர் மார்ச் மாத இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேர்ந்து அவர் பயிற்சி முகாமில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 26-28-க்குள் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் முகாமில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 9 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் 2021 தொடக்க ஆட்டத்தில் விளையாட சென்னை செல்லும் முன்னர், அவர் ஒரு வார தனிமைப்படுத்தலில் இருப்பார்.

ALSO READ: ICC Rating: Narendra Modi Stadium ஆடுகளம் சராசரியா? மிகவும் ஏற்றதா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News