Viral Video: இது என்னடா சோதனை... தண்ணீர் குடிக்க போராடும் குட்டி யானை

குட்டி யானை ஒன்று தனது தும்பிக்கையைப் பயன்படுத்தி தண்ணீர் குடிக்கக் கற்றுக் கொள்வதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2022, 08:42 PM IST
  • அனைவரையும் ஈர்த்த குட்டியானையின் செயல்.
  • குட்டி யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை குடிக்க முயற்சிக்கிறது
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
Viral Video: இது என்னடா சோதனை... தண்ணீர் குடிக்க போராடும் குட்டி யானை title=

குட்டி யானை செய்யும் குறும்புகள்  மழலை குறும்புகள் போல நம்மை ரசிக்க வைப்பவை.  பெரிய யானைகளை காட்டிலும் குட்டி யானை தான் நமது மனதை லேசாக்கும்  விதமாக பல குறும்பு செயல்களில் ஈடுபடுகின்றன.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ கூட, குட்டி யானை ஒன்று செய்யும் குறும்புத்தனம் செய்யும் வீடியோ தான். இந்த க்யூட் வீடியோவானது ட்விட்டரில், Robert E Fuller  என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது.  அந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று தண்ணீருக்கு அருகில் நின்றுகொண்டு தண்ணீரை குடிக்க முயற்சிப்பதை  காணமுடிகிறது.  தனது தும்பிக்கையை அங்கும் இங்குமாக சுழற்றிக்கொண்டு இருக்கும் அந்த குட்டி யானை தண்ணீரை அருந்த முடியாமல், எப்படி குடிப்பது என விடாமல் முயற்சிப்பைப் போல் தோன்றுகிறது. 

தாய் யானை அருகில் நிற்கும் போது குட்டி தன் தும்பிக்கையைப் பயன்படுத்தி தண்ணீர் குடிக்கக் கற்றுக்கொள்வதைக் காட்டும் வீடியோ இணையத்தில் மிக வும் வைரலாகி வருகிறது. குட்டி யானை அதன் தும்பிக்கையால் தண்ணீரைத் தெளிப்பதைக் காட்டுகிறது. அவர் ஆற்றில் இருந்து தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் தண்ணீரைத் தொடர்ந்து தெறிக்கிறார், இது காட்சி மிகவும் ரசிக்க தகுந்ததாக உள்ளது

வைரல் வீடியோவை கீழே  காணலாம்:

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

வீடியோ பகிரப்பட்டதிலிருந்து,  7.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 1,400 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. காட்டு விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்பட்டு பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News