பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? - பரபர தகவல்கள்

Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 13, 2024, 03:02 PM IST
  • கைதானவர்கள் இருவருக்கு வயது 23 மற்றும் 19 ஆகும்.
  • ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறது.
  • இவர்கள் சுட்டதில் மொத்தம் 6 குண்டுகள் பாபா சித்திக்கின் உடலில் பாய்ந்தது.
பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? - பரபர தகவல்கள் title=

Baba Siddique Murder Latest News Updates: மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் (66) மும்பை பாந்தரா கிழக்கு பகுதியில் நேற்றிரவு (அக். 12) சுட்டுக்கொல்லப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. சரத் பவார், அஜித் பவார் என இரு பிரிவுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிந்திருக்கும் நிலையில், நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட பாபா சித்திக், அஜித் பவாரின் பிரிவை சார்ந்தவர் ஆவார். அஜித் பவார் பாஜக கூட்டணியிலும் சரத் பவார் காங்கிரஸ் கூட்டணியிலும் இருக்கிறார்கள். அஜித் பவார் சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சியில் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் உள்ளார்..

மூன்று பேர் கொண்ட கும்பல் இணைந்து பாபா சித்திக்கை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடனே அவரை லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதுவரை அந்த மூன்று பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர். மூன்றாவது நபர் தப்பிவிட்டார். இவர்கள் பாபா சித்திக்கின் விரோதியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் உடன் தொடர்புடையவர்கள் என்றும் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் போலீசார் இதனை இன்னும் உறுதிசெய்யவில்லை. அந்த வகையில், பாபா சித்திக்கின் இந்த கொடூர கொலை குறித்து இதுவரை வெளியான தகவல்களை இங்கு விரிவாக காணலாம். 

கைதான இரண்டு பேர் 

மூன்று குற்றவாளிகளும் சேர்ந்து பாபா சித்திக்கை நோக்கி ஆறு குண்டுகளை சுட்டுள்ளனர். அதில் நான்கு குண்டுகள் பாபா சித்திக்கின் நெஞ்சு பகுதிகளில் தாக்கி உள்ளது. ஹரியானாவை சேர்ந்த 23 வயது குர்மைல் பல்ஜித் சிங் என்பவரும், உத்தர பிரதேசத்தின் 19 வயதான தரம்ராஜ் ராஜேஷ் காய்ஷப் ஆகிய இரு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிவ கௌதம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச காவல்துறையிடம் கைதான இந்த இரண்டு பேர் குறித்த தகவல்களை மும்பை காவல்துறை கேட்டுள்ளது.  

மேலும் படிக்க | யார் இந்த பாபா சித்திக் யார்? எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்? முழு விவரம்!

அதிக ரத்தப்போக்கு

இரவு 9.30 மணிக்கு லீலாவதி மருத்துவமனையின் அவரச மருத்துவ சேவைப் பிரிவுக்கு பாபா சித்திக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு அப்போதே நாடி, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஏதுமில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சம்பவத்தில் அவருக்கு நிறைய ரத்தப்போக்கு ஏற்பபட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இரவு 11.47 மணிக்கு உயிரிழந்தார் என அரிவிக்கப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

குற்றவாளிகள் போட்ட ஸ்கெட்ச்

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் கடந்த 15 நாள்களுக்கு முன்னர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கொரியர் மூலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த மூன்று பேரும் கடந்த 25-30 நாள்களாக குர்லா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு ரூ.14 ஆயிரம் வாடகை செலுத்தி உள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடம், பாபா சித்திக்கின் வீடு, அலுவலகம் அனைவற்றையும் முன்கூட்டியே நோட்டம்விட்டதாக போலீசார் விசாரணையில் குற்றவாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பாபா சித்திக்கை கொலை செய்ய அந்த மூன்று பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு கொலை நடந்த சம்பவ இடத்திற்கு குற்றவாளிகள் மூன்று பேரும் ஆட்டோ ரிக்ஷாவில் வந்துள்ளனர். அந்த இடத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் குற்றப்பிரிவு காவல்துறையினர் தரப்பில் தகவல்கள் கூறப்படுகிறது. இவர்களுக்கு வெளியில் இருந்து மற்றொருவர் பாபா சித்திக் எங்கே இருக்கிறார் என்ற தகவலை கொடுத்துள்ளார் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

மேலும் படிக்க | LPG சிலிண்டரை இலவசமாக கொடுக்கும் அரசு! 1.85 கோடி பெண்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News