வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் உள்ள பிணைப்பையும் நட்பையும் வெளிக்காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இதில் சில சமயம் விலங்குகள் மனிதர்களிடமிருந்தும், சில சமயம் மனிதர்கள் விலங்குகளிடமிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். சமீபத்தில், பிற உயிர்கள் மீது பரிவு கொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டது.
வீடியோவின் தொடக்கத்தில், ஒரு நபர் தனது கையில் கசாப்புக் கத்தியை வைத்திருப்பதை காண முடிகின்றது. 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒருவர் தனக்கு முன்னால் உள்ள வாளியிலிருந்து ஒரு மீனை எடுத்து அதை வெட்ட தயாராவதை காண முடிகின்றது. மீனை வெட்ட அவர் கத்தியை உயர்த்தியவுடன், அவருடைய செல்ல நாய், தன்னுடைய பாதத்தை அவர் கையின் மேல் வைத்துத் தடுத்து, அவரிடமிருந்து கத்தியை எடுத்துச் செல்கிறது. இந்த வீடியோ காண்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
பலரது இதயங்களை கொள்ளைகொண்ட நாயின் செயலை இந்த வீடியோவில் காணலாம்:
The concept of empathy pic.twitter.com/bDrdCE5JOY
— Gabriele Corno (@Gabriele_Corno) October 12, 2022
விலங்குகளின் உணர்ச்சியையும் நுண்ணறிவையும் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது. அந்த நபர் மீனை வெட்டுவது நாய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அதன் முகத்திலிருந்தே தெரிகிறது. அதை தடுக்க அது தான்னால் ஆனவற்றை செய்கிறது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவி, 13 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
அக்டோபர் 12 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது. இணையவாசிகள் கமெண்ட் செக்ஷனில் நாயை பாராட்டி வருகிறார்கள். பல பயனர்கள் ஈமோஜிகளை அள்ளி வீசியுள்ளனர்.
'வாவ்.. எவ்வளவு நல்ல நண்பன்' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், 'விலங்குகளுக்கு நம்மை விட அதிக பச்சாதாபம் உள்ளது' என எழுதியுள்ளார்.
மற்றொரு பயனர், 'மற்றொரு மதிப்புமிக்க மற்றும் அன்பான இடுகையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நீங்கள் இன்னும் இங்கே இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, கேப்ரியல். இந்த தருணம் ஒரு அழகான தருணம், ' என்று குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ