போர்வையை பேய் என நினைத்து பயந்து ஓடிய யானைக்குட்டி!

யானைக்குட்டி ஒன்று காற்றில் பெட்ஷீட் பறந்து தன் மீது விழுந்ததை பேய் என நினைத்து பயந்து ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 14, 2022, 06:09 PM IST
  • பெட்சீட்டை பேய் என நினைத்த குட்டி யானை.
  • அம்மாவிடம் அலறியடித்து ஓட்டம்.
  • இணையத்தில் வைரல் ஆனா வீடியோ.
போர்வையை பேய் என நினைத்து பயந்து ஓடிய யானைக்குட்டி!  title=

யானைகள் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக தோன்றினாலும், அவற்றின் செயல்கள் பார்ப்பதற்கு குழந்தைகள் செய்யும் குறும்புகளை போல அழகாக தெரிகிறது.  பொதுவாக யானையை பார்த்து நாம்தான் பயந்திருப்போம், ஆனால் யானை பயந்திருப்பதை பார்த்திருப்போமா? தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் யானைக்குட்டி பேய் வந்துவிட்டது என நினைத்து பயந்து ஓடுகிறது.  பேய் உண்மையில் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பலருக்கும் பேய் என்று கேட்டாலே அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பேய் என்று கேட்டால் பயந்து நடுங்கிவிடுவார்கள்.

மேலும் படிக்க | பீட்சா டெலிவரி பெண்ணுக்கு தர்ம அடி, 4 பெண் ரவுடிகளின் வீடியோ வைரல் 

மனிதர்கள் மட்டும் பேய் என்றால் பயப்படமாட்டார்கள், உருவத்தில் பெரியதாக இருக்கும் விலங்குகளும் கூட பயப்படும் என்பதை இந்த வீடியோவின் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.  சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் கம்புகளை கொண்டு அடைக்கப்பட்ட வேலிக்குள் தாய் யானையும், குட்டி யானையும் உள்ளது.  அந்த இரவு நேரத்தில் குட்டி யானை ஒரு மஞ்சள் நிற பெட்ஷீட்டில் படுத்து நன்றாக உறங்கிக்கொண்டு இருக்கின்றது, வேலி ஓரமாக தாய் யானை நின்றுகொண்டு இருக்கிறது.  அப்போது அந்த பகுதியில் வேகமாக காற்று வீச, அந்த மஞ்சள் நிற பெட்ஷீட் பறந்து போயி உறங்கிக்கொண்டு இருக்கும் குட்டி யானை மீது விழுகிறது.

 

உடனே திடுக்கிட்டு எழுந்த யானைக்குட்டி, பேய் தான் வந்துவிட்டதோ என நினைத்து வேகமாக எழுந்து அதன் தாயிடம் ஓடிப்போய் தஞ்சம் அடைகின்றது.  இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும், இந்த வீடியோவை பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  பலரும் இந்த வீடியோவிற்கு சிரிப்பு எமோஜிக்களையும், ஹார்ட் எமோஜிக்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News