நிர்மலா டீச்சரின் கைபேசி பறிமுதல்!

பேராசிரியை நிர்மலா தேவியிடம் இருந்த 3 செல்போன்களை கைப்பற்றி போலீசார் விசாரணை...! 

Last Updated : Apr 17, 2018, 12:48 PM IST
நிர்மலா டீச்சரின் கைபேசி பறிமுதல்!  title=

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித பேராசிரியையாக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் தனது வகுப்பில் படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு தெரிவித்ததுடன் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் எனவும் கூறிய ஆடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

இதனையடுத்து அக்கலூரி கணித பேராசிரியையாக பணிப்புரியும் நிர்மலா தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு அந்த பேராசிரியை நிர்மலா தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. 

இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மதி தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, நேற்று மாலை வீட்டின் பூட்டை உடைத்து அவரை கைது செய்தனர். 

பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் ஆளுநர் மாளிகையில் விடிய விடிய விசாரணை செய்தனர். 

இந்த விவகாரத்தின் பெயரில், சந்தேகத்துடன் அவரது கைபேசி பறிமுதல் செய்தனர். அதில் பல கல்லூரி பெண்களின் புகைப்படம் இருப்பதாகவும், பல உயர் அதிகாரிகளின் மொபைல் எண் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

Trending News