Income Tax Savings: பிரிவு 80Cயைத் தவிர வருமான வரியைச் சேமிக்க 10 வழிகள்

வருமான வரி சேமிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. இன்னும் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 க்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஐ.டி.ஆர் பற்றி தெரியலாம், ஆனால் வரி சேமிப்பு பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா? தெரிந்துக் கொண்டால் உங்கள் வரியில் கொஞ்சம் எஞ்சும்... 

புதுடெல்லி: வருமான வரியின் (Income Tax) 80 சி (80C) பிரிவில் ஏற்கனவே பல விஷயங்கள் நிரம்பி இருப்பதால் என்ன செய்வது? எப்படி வரிச் சுமையை குறைப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? பெரும்பாலான சேமிப்புத் திட்டங்கள், செலவுகள் என 80 சி வரம்புக்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் இந்தப் பிரிவில் தள்ளுபடி 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே. அத்தகைய சூழ்நிலையில், 80 சி தவிர, வரியை சேமிக்கக்கூடிய வழிகள் என்ன என்பதற்கான? முடிந்த அளவு குறைவான வரியை எப்படி செலுத்துவது மற்றும் அதிகபட்ச வரியை நீங்கள் சேமிக்கக்கூடிய 10 வழிகளை தெரிந்துக் கொள்வோமா?  

Also Read | SBI Offer: 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடி வேண்டுமா? 

 

1 /11

நீங்கள் பிறருக்கு உதவி செய்தால், வரியை மிச்சப்படுத்தலாம் தெரியுமா? பிரிவு 80 ஜி (section 80G) இன் கீழ் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்கும் நன்கொடை, வரி விலக்குக்கு உட்பட்டது. ஆனால், கொடுக்கப்படும் நன்கொடைத் தொகை அனைத்திற்கும் விலக்கு கிடைக்காது.  

2 /11

சிறப்பு நோய் சிகிச்சை (80DDB) புற்றுநோய், நரம்பியல் நோய் அல்லது எய்ட்ஸ் போன்ற சில நோய்களுக்கு சிகிச்சை பெறுவது மிகவும் செலவு பிடிப்பது. 80 டி.டி.பி (80DDB) பிரிவின் கீழ் 40,000 ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்களுக்கு இந்த வரி விலக்கு1 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.

3 /11

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ செலவுகள் (80DD) மாற்றுத் திறனாளி ஒருவரை நீங்கள் கவனித்துக்கொண்டால், அதற்கான செலவுகளை பிரிவு 80DD கீழ் தாக்கல் செய்யலாம். அந்த மாற்றுத்திறனாளி நபர் பெற்றோர், குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்கள் என குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் இந்த வரி விலக்கைப் பெறலாம். ராகவும் இருக்கலாம். நீங்கள் எவ்வளவு வரி விலக்கு பெறுவீர்கள் என்பது மாற்றுத் திறனாளியின் இயலாமையைப் (disability) பொறுத்தது. இந்தப் பிரிவின் கீழ் 75,000 முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை கிடைக்கிறது.

4 /11

வங்கி வட்டி (80TTA) வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்கான வட்டிக்கு வரிச்சலுகை கிடைக்கும். பிரிவு 80TTA இன் கீழ், எந்தவொரு நபரும் அல்லது HUF (இந்து கூட்டுக் குடும்பம்) அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு பெறலாம். இதில் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்பு கணக்குகள் என அனைத்துவிதமான சேமிப்பு கணக்கின் வட்டித் தொகையும் அடங்கும். இந்த வரி விலக்கு அனைவருக்கும் பொதுவானது, மூத்த குடிமக்களுக்கு எந்த அதிகரிப்பும் அதில் இல்லை. 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி கிடைத்தால் அது வருமானமாக கணக்கிடப்படும். அதற்கு வரி செலுத்த வேண்டும். நான்கு சேமிப்பு வங்கி கணக்குகளிலிருந்து மொத்தமாக ஒரு நிதியாண்டில் உங்களுக்கு 15,000 ரூபாய் வட்டி கிடைத்தால், 10,000 ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்கும். எஞ்சியிஅ 5,000 ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும்.

5 /11

HRA (80GG) நீங்கள் சம்பளம் பெறும் பணியாளரா?  உங்கள் நிறுவனம் உங்களுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) கொடுக்கிறாதா? ஆம் என்றால், நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகைக்கு வரி விலக்கு கிடைக்கும். ஆனால் உங்களுக்கு எச்.ஆர்.ஏ (HRA) அலவன்ஸ் இல்லை என்றால், வீட்டு வாடகைக்கு வரி விலக்கு கோர முடியாது. அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு HRAவில் வரிவிலக்கு கிடைககது. அவர்கள், 80GG பிரிவில் விலக்குப் பெறலாம்.     

6 /11

முதல் முறையாக வீடு வாங்குவது (80EE) இதற்கு முன் உங்கள் பெயரில் வேறு வீடு இருக்கக்கூடாது என்பது தான் 80EE பிரிவின் நிபந்தனை. அதாவது முதல் வீடு வாங்குவோருக்கு 80EE பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு அரசாங்கம் கூடுதல் தள்ளுபடி அளிக்கிறது. இந்த பிரிவின் கீழ், 50,000 ரூபாய் வரையிலான வரி விலக்கைப் பெறலாம். இந்த விலக்கு பிரிவு 24 இன் கீழ் வழங்கப்பட்ட விலக்கு என்பதை விட கூடுதலாகும். அதாவது, முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடனின் வட்டிக்கு மட்டுமே ஒரு வருடத்தில் குறைந்தது 2.5 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதற்கு ஒரேயொரு நிபந்தனை மட்டுமே இருக்கிறது. நீங்கள் வாங்கும் சொத்து மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும், கடன் 35 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

7 /11

வீட்டுக் கடன் வட்டி (பிரிவு 24) வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு வழிகளில் வரி விலக்கு கோரலாம். அசல் தொகையில், 80 சி (80C) பிரிவின்  கீழ் ரூ .1.5 லட்சம் வரிச்சலுகையைத் தவிர்த்து, பிரிவு 24 இன் கீழ் வட்டி மீதான தள்ளுபடியும் பெறலாம். இந்த பிரிவின் கீழ் நீங்கள் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம், சொத்து உங்கள் பெயரில் இருந்து, நீங்கள் அதில் வசித்தாலும், வசிக்காவிட்டாலும் வரி விலக்கு பெறலாம்.

8 /11

கல்வி கடன் (80E) குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பிச் செலுத்துவதற்கு வரி விலக்கு கோரலாம். பிரிவு 80 இ (80E) இன் கீழ் கல்வி கடனின் வட்டி, வரிச்சலுகைக்கு உட்பட்டது. இந்த வரி விலக்கு பெற்றோர் மற்றும் பிள்ளை என யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், யார் கடனை செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் இது குறித்து முடிவு செய்யப்படும். வரி விலக்குக்கு வரம்பு இல்லை, நீங்கள் விரும்பும் அளவுக்கு வட்டிக்கு வரி விலக்கு கோரலாம்.

9 /11

சுகாதார காப்பீடு (80D) பிரிவு 80 டி (80D) இன் கீழ் நீங்கள் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்திற்கு வரி விலக்குக் கோரலாம். 80 டி கீழ் நீங்கள் எவ்வளவு வரி விலக்கு பெறுவீர்கள் என்பது உங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் வயது என்ன என்பதைப் பொறுத்தது. இந்த வழியில், 25,000 ரூபாய், 50,000 மற்றும் 1 லட்சம் ரூபாய் என பிரிவுக்கு ஏற்றவாறு   உங்கள் வரியில் இருந்து விலக்கு பெறலாம்.  

10 /11

NPS (80CCD (1B)) தேசிய ஓய்வூதிய முறைமையில் (NPS), நீங்கள் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரியைச் சேமிக்கலாம். இதற்கு மேல், பிரிவு 80 சிசிடி (1 பி) (80CCD (1B)) இன் கீழ் ரூ .50,000 கூடுதலாக சேமிக்கலாம். அதாவது மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

11 /11

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. டிசம்பர் 31 க்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.