Lord Siva Worship In Tamil: கடவுளின் அனுக்கிரகம் இல்லாமல், அவருடைய அருள் இல்லாமல் விரதம் இருக்க முடியாது. சிவ பெருமானின் அருள் இருந்தால் மட்டும் தான் சிவராத்திரி விரதங்கள் இருக்க முடியும் என சிவபுராணதில் கூறப்பட்டு உள்ளது.
Maha Shivaratri 2025 In India: "தென்னாடுடைய சிவனே போற்றி" என தமிழர்கள் வழிபடும் சிவபெருமானுக்கு வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது.
சிவபெருமானுக்காக இருக்கும் அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது இந்த மகாசிவராத்திரி விரதம். சிவபெருமானுக்கு எத்தனையோ திருநாமம் இருக்கு, அதில் மிகவும் உயர்வாக சொல்லப்படுவது எது என்றால், மகாதேவன் என்கிற திருநாமம் தான். மகாதேவன் என்றால் கடவுள்கள் அனைவருக்கும் மேலான கடவுள் என அர்த்தமும் உள்ளது.
கடவுள்களுக்கெல்லாம் தலைவன் என்று பொருள். 'சிவாய நமஹ' என்று சொல்பவருக்கு அபாயம் ஏற்படாது என நம்பிக்கை இருக்கிறது. நமது கர்ம வினைகளில் இருந்தும், நம்முடைய அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு 'சிவனே கதி' என்று சிவபெருமானை சரணடைவதற்கு ஏற்ற நாள்தான் இந்த மகாசிவராத்திரி விரதம்.
இந்த மகாசிவராத்திரி விரதத்தை நாம் நினைத்த மாதிரியெல்லாம் இருக்க முடியாது. அதாவது கடவுளின் அனுக்கிரகம் இல்லாமல், அவருடைய அருள் இல்லாமல் விரதம் இருக்க முடியாது என சிவபுராணதில் கூறப்பட்டு உள்ளது. எனவே சிவ பெருமானின் அருள் இருந்தால் மட்டும் தான் சிவராத்திரி விரதங்கள் இருக்க முடியும். இந்த மகாசிவராத்திரி நாளில் தான் சிவனை வழிபட்டு பார்வதி தேவியும், தேவர்களும் வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு மாசமுமே சிவராத்திரி வரும். ஆனால் மாசி மாசம் வரக்கூடிய இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி எனக் கூறுவது உண்டு. இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி (புதன்கிழமை) வருகிறது.
சிவராத்திரி எந்த நேரம் வருகிறது எனப் பார்த்தால், பிப்ரவரி 26 ஆம் தேதி காலையில 10:18 வரை திரியோதசி திதி. அதற்கு பிறகு சதுர்தசி திதி ஆரம்பமாகும். தேய்ப்பிறை சதுர்தசி திதியை வந்து மகாநிஷி அப்படின்னு குறிப்பிடுவார்கள். அதாவது அமாவாசைக்கு முன்பு வரும் இரவு 11:36 மணி முதல் 12:24 வரையிலான காலம். இந்த நேரத்தில் சிவபூஜை செய்வது மிகவும் உயர்வானது. நீங்கள் மற்ற நேரங்களில் செய்ய முடியவில்லை என்றால் கூட, இந்த நேரத்தில் மட்டும் கண் விழித்து சிவனை வழிபட்டால் நிறைய புண்ணியம் கிடைக்கும்.
உங்களுக்கு சந்திராயணம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியில் மாசி மாதத்தை 'மகா மாதம்' எனக் கூறுவது உண்டு. இதனால் இந்த மாதத்தில் வரும் சிவராத்திரியை 'மகா சிவராத்திரி' எனச் சொல்கிறோம். பார்வதி தேவி உலக நன்மைக்காக சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்ற நாள் தான் மகாசிவராத்திரி எனக் கொண்டாடுறோம்.
ராத்திரி அப்படி என்றால் பொதுவாக இரவு பொழுதை குறிக்கும். ஆனால் ஆனா 'ராத்திரம்' என்ற சொல்லுக்கு 'அறிவு' என்ற பொருளும் உண்டு. உலகின் தலைவனான சிவபெருமானை உணர்ந்து அவரின் அருளை பெறக்கூடிய ராத்திரி என்பதால் மகாசிவராத்திரி எனவும் கூறுவது உண்டு.
சிவராத்திரியியில் விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலன்களை தரக்கூடியது என சாஸ்திரங்கள் சொல்கிறது. மகாசிவராத்திரி அன்று இரவு நான்கு கால பூஜைகள் நடப்பெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், இரண்டாம் காலத்தில் பார்வதி தேவியும், மூன்றாம் காலத்தில் தேவர்களும், நான்காம் காலத்தில் மனிதர்களும் உள்ளிட்ட பிற உயிரினங்களும் சிவனை வழிபட்டு பயனடைவார்கள்.
சிவனை நம்பி முழு சரணாகதி அடைந்தோம் என்றால் நம்மளுடைய வேண்டுதல் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பார். இவ்வளவு சிறப்புமிக்க மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாளில் சிவனை வழிபட்டு சிவனோட புண்ணியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.