Lord Shiva Worshipping In Tamil: சிவபெருமானுக்கு பிடித்த பூக்களை வைத்து வழிபட்டால் உங்கள் வீட்டில் எவ்வளவு வறுமை இருந்தாலும், அது விலகி செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமில்லாம்ல் சிவனுக்கு பிடித்த பூவை வைத்து வழிபாடு செய்தால், உங்களை சிவனுக்கு ரொம்ப பிடிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
What Are The Favorite Flowers Of Lord Shiva: மகாசிவராத்திரி நாளில் ஐந்து பூக்களில் ஒன்றையாவது கண்டிப்பா வைத்து சிவனை கும்பிட்டால், உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
Maha Shivaratri News In Tamil: எனவே சிவபெருமானுக்கு பிடித்த பூக்கள் என்ன? அந்த பூக்களை வைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்? சிவபெருமானுக்கு பிடித்த பூ-வின் சிறப்பு என்ன? போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
சிவபெருமானுக்கு பிடித்த முதல் பூ 'கரு ஊமத்தை பூ' (Karu Oomathai Poo) சிவபெருமானுக்கு ஊமத்தை பூ என்றாலே ரொம்ப பிடிக்கும். இதன் காரணமாக சிவ வழிபாடுகளில் கரு ஊமத்தை பூ மற்றும் பழங்கள் மிக முக்கியமானதாக திகழப்படுகிறது. இந்த பூக்களை சிவனுக்கு படைத்து வழிபட்டால் அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுபடுவார். திருமண வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீரும் கிடைக்கும் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது
சிவபெருமானுக்கு பிடித்த இரண்டாவது பூ "செம்பருத்தி பூ" (Sembaruthi Poo) சிவபுராணத்தின்படி சிவபெருமானுக்கு சிவப்பு நிற பூக்களை அர்ப்பணித்து வழிபடுவது ரொம்ப நல்லது. அதுவும் செம்பருத்தி பூக்களை (Shoeblackplant) ஒவ்வொன்றாக எடுத்து சிவ மந்திரத்தை கூறி வழிபட்டோம் என்றால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பிக்கை.
சிவபெருமானுக்கு பிடித்த மூன்றாவது பூ "மல்லிகைப்பூ" (Malligai Poo). நீண்ட நாட்களாக தனக்கு தேவையான பொருளை வாங்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் வாங்க முடியவில்லை. அதற்கான நிதிநிலைமை இல்லை என நினைப்பவர்கள், இந்த மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு மல்லிகைப்பூவை (Jasmine Flower) அர்ப்பணித்து வழிபட வேண்டும். இப்படி செய்வதனால் உங்கள் ஆசை சிவபெருமானோடு அருளால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
சிவபெருமானுக்கு பிடித்த நான்காவது பூ "ரோஜா பூ" (Rose) இப்போ மகாசிவராத்திரி நாளன்று சிவபெருமானுக்கு ரோஜா பூக்களை (Rose Flower) அர்ப்பணித்து வழிபடுவது மிகவும் நல்லது. இதனால் ஒருத்தரோட ஆரோக்கியம் மேம்படுவதோடு, திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிவபெருமானுக்கு பிடித்த ஐந்தாவது பூ "ஆளிமலர்". இந்த ஆளிமலரை (Flax Flower) மகாசிவராத்திரி நாள் அன்று சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வழிபட்டால், சிவனோட கவனத்தை நம் பால் ஈர்க்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த மலர் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மலராகும். மகாசிவராத்திரி நாளில் எத்தனையோ பூக்களையும், இலைகளையும் அபிஷேகத்துக்காக கொடுப்போம். அதில் இந்த பூவை கொடுத்தால் சிவனுக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். இதனால உங்களுடைய மனக்கவலைகள் நீங்கும். நோய்கள், வறுமை நிலை நீங்கும். முற்பிறவியில் செய்த பாவங்கள் குறையும் என சொல்லப்படுகிறது.