மார்ச் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், அகவிலைப்படி, UPI, FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ

Big Rule Changes From March 1 2025: நாளை இந்த நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதம் பிறக்கவுள்ளது. நாளை முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

Major Rule Changes from March 1 2025: பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது பல புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கம். மார்ச் மாதத்திலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, யுபிஐ பரிவர்த்தனைகள், ஃபிக்சட் டெபாசிட், டீமேட் கணக்குகள், இபிஎஃப்ஓ விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

 

1 /11

மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும் விதிகள் சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மார்ச் 1 முதல் பல முக்கியமான நிதி மற்றும் பொருளாதார மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. மார்ச் 1 முதல் மாறவுள்ள சில முக்கிய விதிகள் பற்றி இங்கே காணலாம்.

2 /11

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன. மார்ச் 1, 2025 அன்று, வீட்டு உபயோக மற்றும் வணிக LPG சிலிண்டர்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்படும். விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைப்பு சாமானியர்களின் வரவு செலவை பாதிக்கலாம்.  

3 /11

ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு (DA Hike) பற்றிய அறிவிப்பு இந்த மாதம் வரும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 /11

 CNG மற்றும் PNG உள்ளிட்ட இயற்கை எரிவாயுவின் விலைகள் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. கூடுதலாக, விமான டர்பைன் எரிபொருள் (ATF) விகிதங்களும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சரிசெய்யப்படுகின்றன. இந்த விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வாகன உரிமையாளர்கள், சாமானிய மக்கள் மற்றும் வணிகங்களுக்கான செலவுகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.  

5 /11

மார்ச் 1, 2025 முதல், UPI பரிவர்த்தனைகளில் ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பு இருக்கும். புதிய IRDAI விதியின் கீழ், UPI மூலம் காப்பீட்டு பிரீமியங்களை செலுத்துவது எளிதாகவும் வசதியாகவும் மாறும். இந்த மாற்றம் பாலிசிதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணங்களை செலுத்துவதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 /11

நிலையான வைப்புத்தொகை (FD) தொடர்பான பல புதுப்பிப்புகள் மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்கள் FD முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக குறுகிய கால வைப்புத்தொகை உள்ளவர்களுக்கு வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

7 /11

வங்கிகள் அவற்றின் பணப்புழக்கம் மற்றும் நிதித் தேவைகளின் அடிப்படையில் FD வட்டி விகிதங்களைத் திருத்த நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட FD களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றங்கள் காணப்படலாம்.

8 /11

FD வருமானம் தொடர்பான வரி விலக்கு விதிகளும் மாறக்கூடும். இது ஒட்டுமொத்த வருவாயைப் பாதிக்கும். பணத்தை திரும்பப் பெறும் விதிகளில் ஏற்படும் புதுப்பிப்புகள் முதிர்ச்சிக்கு முன்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதியை அணுகும் முறையை மாற்றக்கூடும்.

9 /11

மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் டீமேட் கணக்குகளின் நாமினிகள் தொடர்பான சில விதிகளை SEBI சமீபத்தில் மாற்றியுள்ளது. இப்போது முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் அதிகபட்சம் 10 நாமினிகளை குறிப்பிடலாம். அவர்கள் நாமினிகள் பற்றிய கூடுதல் விவரங்களையும் வழங்க வேண்டும். முதலீட்டாளரின் பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர்கள் நாமினிகளை அறிவிக்க முடியாது. உரிமை கோரப்படாத சொத்துக்களைக் குறைப்பதற்கும் முதலீட்டு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.

10 /11

EPFO-வின் ELI திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், PF கணக்கைக் கண்காணிக்கவும், யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதும் (UAN Activation), வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதும் அவசியம். இந்தப் பணியை மார்ச் 15 -க்குள் செய்து முடிக்க வேண்டும். UAN ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால், ஊழியர்கள் ELI திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதற்கான காலக்கெடு முன்னர் பிப்ரவரி 15 ஆக இருந்தது.

11 /11

இந்த விதி மாற்றங்கள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருப்பது மிக அவசியமாகும். இதன் மூலம் தெவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதோடு, நமக்கு கிடைக்கும் வசதிகளையும் நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.