Saturn Transit 2025: நீதிக் கடவுளாக விளங்கும் சனி பகவான், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பவர். காகத்தினை வாகனமாகக் கொண்ட சனீஸ்வரன், பாரபட்சம் இன்றி, பாவம் புண்ணியங்களுக்கான பலன்களை கொடுக்கிறார்.
சனிப்பெயர்ச்சியின் போது, சனி பகவான் எந்த ராசியில் இருக்கிறார் என்பதை பொறுத்து தான் ஏழரை நாட்டு சனி பாதிப்பு இருக்கும். மிகவும் மெதுவாக நகரும் இருக்கும் சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகி, தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.
சனிபகவான் கொடுக்கும் தாக்கத்தை தான் ஏழரை சனி என்கிறோம். ஏழரை நாட்டு சனி காலத்தில், பாதிக்கப்பட்ட ராசிகள் சனி பகவானால் பல சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். சிக்கல்களுக்கும் கஷ்டங்களுக்கும் குறைவிருக்காது.
சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆவதால், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்கும். அதே சமயத்தில் சிலர், வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். சனீஸ்வரன் மார்ச் மாதம் 29ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிபகவான் மீனத்திற்கு செல்வதால், அதற்கு அடுத்த ராசியான மேஷ ராசிக்கு விரய சனி காலம் தொடங்குகிறது. பொதுவாக, ஏழரை சரியின் ஆரம்ப கட்டத்தில் அதிக தாக்கம் இருக்காது என்றாலும், வருமுன் காப்போம் என்பதைப் போல, வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க தயாராவது நல்லது. இதனால், பாதிப்புகளை குறைக்கலாம்.
சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவான் மீன ராசிக்கு செல்லும் நிலையில் அந்த ராசிக்கு, மிகவும் சோதனையான காலகட்டமான ஜென்ம சனி காலம் தொடங்கும். சனியின் தாக்கத்தால், பொருளாதார நிலை பாதிக்கப்படுவதோடு, வாழ்க்கையின் எல்லைக்கு கொண்டு சென்று விடும். மன விரக்தியும், உடல்நல பாதிப்பும் சேர்ந்து கொண்டு ஆளை புரட்டிப்போடும்.
சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவான் மீன ராசிக்கு செல்லும் நிலையில் அந்த ராசிக்கு, மிகவும் சோதனையான காலகட்டமான ஜென்ம சனி காலம் தொடங்கும். சனியின் தாக்கத்தால், பொருளாதார நிலை பாதிக்கப்படுவதோடு, வாழ்க்கையின் எல்லைக்கு கொண்டு சென்று விடும். மன விரக்தியும், உடல்நல பாதிப்பும் சேர்ந்து கொண்டு ஆளை புரட்டிப்போடும்.
பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், நல்ல மனம் கொண்டவர்களையும், கருணை உள்ளம் கொண்டவர்களையும் அதிகமாக படுத்த மாட்டார். ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதும், அன்னதானங்கள் செய்வதும், ஆன்மீக பணிகளில் ஈடுபடுவதும், சனி பகவானை மகிழ்விக்கும். இதனால் பாதிப்புகள் குறையும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.