Fenugreek for Weight Loss: இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பது அனைவருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகி வருகிறது. அனைவரும் எடையை குறைக்க விரும்புகின்றனர்.
ஏனெனில் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால், பல நோய்களின் பிடியில் இருந்து தப்பிக்கலாம். இதற்காக, மக்கள் ஜிம் செல்கிறார்கள், உனவுகட்டுப்பாட்டை மெற்கொள்கிறார்கள், இன்னும் பல முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நம் வீடுகளில் கிடைக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்தே நாம் நம் உடல் எடையை குறைக்க முடியும். இதனால் பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
வெந்தயத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பல அம்சங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். அதற்கான வழிகளை பற்றி இந்த பதுவில் காணலாம்.
எடை இழப்புக்கு வெந்தய நீர் மிகவும் உதவியாக இருக்கும். இந்த தண்ணீரை தயாரிக்க, 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இப்போது இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் நச்சுத்தன்மை நீங்கி, விரைவில் எடை குறையும்.
உடல் எடையை குறைக்க, வெந்தய டீ தயாரித்து குடிக்கலாம். இந்த டீயை தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து, தண்ணீர் கொதித்ததும், அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகும் போது வடிகட்டி குடிக்கவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும், இது உடல் பருமனை போக்க உதவும்.
உடல் எடையை வேகமாக குறைக்க, வெந்தயத்தை அரைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை மற்றும் மாலை சாப்பிட்டு வர உடல் எடை வேகமாக குறையும். உடல் எடையை குறைப்பதோடு, வெந்தயமும் தேனும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை
Next Gallery