Uric Acid And Health: ப்யூரின் நிறைந்த பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் யூரிக் அமிலம் அதிகமாகிறது. இது படிக வடிவில் மூட்டுகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
யூரிக் அமிலம் அதிகமானால், அது, கீல்வாதத்தை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகத்தையும் சேதப்படுத்துகிறது. சரியான நேரத்தில் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் சுலபமானது.
யூரிக் அமிலம் ஒரு நச்சு, இது நம் உடலில் உள்ள இந்த அமிலத்தை சிறுநீரகம், சிறுநீர் வழியாக வெளியேற்றிக்கொண்டே இருக்கும். இது தொடர்ச்சியாக நடக்கும் ஒரு செயல்முறையாகும், ஆனால் நாம் அதிக பியூரின் நிறைந்த பொருட்களை உட்கொள்ளத் தொடங்கும் போது, உடலில் யூரிக் அமிலம் தங்கிவிடுகிறது.
சிறுநீரகத்தால், அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற முடியாமல் போகும்போது, அது, உடலின் மூட்டுகளில் படிக வடிவத்தில் உறையத் தொடங்குகிறது.
பெருங்காயத்தை தினசரி அடிப்படையில் பயன்படுத்துவதால், வயிற்றின் செரிமான அமைப்பு வலுப்படுவதோடு வலி, வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கின்றன. செரிமான அமைப்பை சரிசெய்வதோடு, யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்தும் பெருங்காயம், அமிலம் உருவாவதையும் தடுக்கிறது.
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட உணவுகள் யூரிக் அமிலம் உருவாவதைத் தடுக்கும். இந்த பண்புகள் குறைவாக உள்ள உணவுப்பொருட்கள் அமிலத்தை உருவாக்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
யூரிக் அமிலத்தை உருவாக்கும் உணவுகளை தவிப்பது மூட்டுவலியைக் குறைக்கும்
பாதாம், வால்நட்ஸ் போன்றவை யூரிக் அமில அளவை குறைக்கும். இவற்றை உண்பது சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும்
வளர்சிதை மாற்றத்தை சரிசெய்வதிலும் பெருங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது
காளான்களை உண்ணும்போது, அவற்றை தேர்ந்தெடுத்து உண்பது அவசியம் ஆகும்