அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!

தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது.  உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.  

 

1 /5

இஞ்சி இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.  இஞ்சியில் ஜிங்கரோன் மற்றும் ஜிஞ்சரால் போன்ற உயிர்வேதியியல் இரசாயனங்கள் உள்ளன, இது வலி நிவாரண பண்புகளை கொண்டுள்ளது.  வீக்கம் மற்றும் முதுகு வலியை குறைக்க இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.

2 /5

மஞ்சள் மஞ்சள் உடலில் உள்ள அழற்சியின் அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.  மஞ்சளின் பண்புகள் முதுகுவலி மற்றும் அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

3 /5

பூண்டு பூண்டு முதுகுவலி உள்ளவர்களுக்கு மிகவும் உதவுகிறது. கடுகு எண்ணெயில் 5 பூண்டுகளை போட்டு கொதிக்க விட்டு, அதனை கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது முதுகுவலியிலிருந்து நிவாரணம் தரும்.

4 /5

இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டைஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது. இலவங்கப்பட்டை போன்ற இயற்கை வைத்தியம் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. இது முதுகுவலிக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக உள்ளது.

5 /5

கல் உப்பு கல் உப்பு உடல் அழற்சி செயல்முறைகளை குறைக்கிறது. மேலும் இது மூட்டுவலி வலியைக் குறைக்கிறது மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது.