தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட.. இந்த காய்களை சாப்பிட்டால் போதும்

Weight Loss Tips: உடல் எடையைக் குறைக்க, உணவுப் பழக்கத்தைப் போலவே உடல் செயல்பாடும் முக்கியம். நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்க விரும்புகிறோம், ஆனால் உடற்பயிற்சி செய்ய சிலரிடம் நேரம் இருப்பதில்லை, சிலரிடம் விருப்பம் இருப்பதில்லை.

இதனால் நாம் விரும்பிய இலக்கை அடைய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழி உள்ளது. வயிற்றில் அதிகமாக சேரும் கொழுப்பை தொப்பை கொழுப்பு என்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தொப்பை கொழுப்பு என்பது நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அறிகுறி என்றும் சில ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. அதிக செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையால் தொப்பை கொழுப்பு பிரச்சனை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். 

 

1 /8

காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளன. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும், எனவே அவற்றை உணவில் சேர்ப்பது எளிது. பருவகால காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தொப்பையை குறைக்க உதவும் 5 காய்கறிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

2 /8

பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் பூசணிக்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும். பூசணிக்காயை கறி, கூட்டு, சாம்பார், துவையல் என பல வடிவங்களில் உட்கொள்ளலாம். 

3 /8

ப்ரோக்கோலி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி, கால்சியம் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் ப்ரோக்கோலியில் உள்ளன. வைட்டமின் சி, கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. எடை இழப்பு தவிர, ப்ரோக்கோலியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குகிறது.  

4 /8

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் காய்களில் கேரட்டிற்கும் முக்கிய பங்கு உள்ளது. கேரட் ஜூஸ் குடிப்பதும் தொப்பையை குறைக்க உதவுகிறது.

5 /8

முட்டைக்கோஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காயாகும். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. நறுக்கப்பட்ட  முட்டைக்கோஸில் 22 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) விரும்பும் நபர்கள் அதை உட்கொள்வது ஒரு நல்ல வழியாக இருக்கும். முட்டைக்கோஸ் உட்கொள்வது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

6 /8

பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். கரையக்கூடிய நார்ச்சத்தை உட்கொள்வது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. பீன்சை கறி, கூட்டு, உசுலி என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். 

7 /8

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். வெள்ளரியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வயிறு விரைவில் நிரம்புகிறது. வெள்ளரிக்காய் சாறு குடிப்பது தொப்பையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் வெள்ளரிக்காயில் கலோரி அளவு குறைவாக உள்ளது. இதை ஆரோக்கியமான மத்தியான சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை