அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற டாப் 6 அணிகள்... இந்தியாவுக்கு எந்த இடம்?

இதுவரை அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய அணிகளின் டாப் 6 பட்டியலை இங்கு விரிவாக காணலாம். 

ஆஸ்திரேலியாதான் முதலிடத்தில் இருக்கும் என அனைவருக்குமே தெரிந்தது என்றாலும் அது எத்தனை கோப்பைகளை வைத்திருக்கிறது என்பதையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

 

 

1 /8

கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட ஐசிசி தொடர்கள் தற்போது தொடர்ந்து நடைபெறுகின்றன. கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி நான்காண்டுகளுக்கு ஒருமுறையும், டி20 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகியவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுகிறது.  

2 /8

சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2017ஆம் ஆண்டிற்கு பின் நிறுத்தப்பட்ட பின்னர், தற்போது 2025இல் மீண்டும் நடைபெறுகிறது. தொடக்கத்தில் அதுவும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடைபெற்றது. அந்த வகையில், இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய அணிகளின் டாப் 6 பட்டியலை இங்கு காணலாம்.     

3 /8

6. இலங்கை: மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 1996 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2014 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை கைப்பற்றி உள்ளது.   

4 /8

5. இங்கிலாந்து: மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2010 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. 

5 /8

4. பாகிஸ்தான்: மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 1992 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2009 டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை பாகிஸ்தான் வென்றுள்ளது.   

6 /8

3. மேற்கு இந்திய தீவுகள்: 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 1972, 1975 உள்ளிட்ட டி20 உலகக் கோப்பை மற்றும் 2012, 2016 டி20 உலகக் கோப்பையை மேற்கு இந்திய தீவுகள் வென்றது.   

7 /8

2. இந்தியா: 6 ஐசிசி கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. 1983, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2007 மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை, 2002 மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்தியா வென்றுள்ளது.   

8 /8

1. ஆஸ்திரேலியா: 10 ஐசிசி கோப்பைகளை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 1987, 1999, 2003, 2007, 2015, 2023 ஆகிய ஆறு கிரிக்கெட் உலகக் கோப்பை, 2006 மற்றும் 2009 சாம்பியன்ஸ் டிராபி, 2021 டி20 உலகக் கோப்பை, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.