Sun Transit in Sagittarius: 2024 ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி டிசம்பர் 15 அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் தமிழ் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
மார்கழி மாத பலன்கள்: மார்கழி மாதம் மிகவும் மங்களகரமான தமிழ் மாதம். மார்கழி மாதத்தில் திருமண வைபவங்களை நடத்தாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், இந்த காலத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனின் டிசம்பர் மாத பெயர்ச்சியில், மார்கழி மாதம் பிறக்கும் நிலையில், மார்கழி தனுர் மாதம் எனவும் அழைக்கப்படுகிறது.
சூரியன் பெயர்ச்சி 2024: வரும் 2024 டிசம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:10 மணிக்கு சூரியன் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷம், சிம்மம், துலாம் உள்ளிட்ட 6 ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சியினால் பெரிதும் பலன் அடைவார்கள். தனுசு ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி: சூரியப் பெயர்ச்சி காரணமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட பணம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளையும் கண்டுபிடிப்பார்கள். வருட இறுதியில் எங்காவது குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் லாபம் ஈட்டுவதற்கான பல வாய்ப்புகளைப் பெறுவார்கள். சொந்த வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் உண்டாகும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் திடீரென அதிகரிக்கும். குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் சிறப்பாக கவனித்துக்கொள்வீர்கள்.
சிம்ம ராசி: சூரியப் பெயர்ச்சியினால், மார்கழி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை அதிகம் பெறுவார்கள். உங்கள் மனதின் பல விருப்பங்களும் நிறைவேறும். உங்கள் குழந்தையின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மனைவியுடனான உறவு சாதகமாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, நல்ல இடத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் சகோதர சகோதரிகளுடனான உறவு மேம்படும்.
துலாம் ராசி: சூரியப் பெயர்ச்சியினால், துலாம் ராசிக்காரர்களின் சுகபோகங்கள் நன்றாக அதிகரித்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். பொருளாதார நிலை வலுப்பெறும். உங்கள் வியாபாரத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லவும் முடியும். சமூகத்தில் மரியாதைக்குரிய மற்றும் செல்வந்தராக அங்கீகரிக்கப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள், மேலும் நீங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறுவீர்கள்.
விருச்சிக ராசி: மார்கழி மாத சூரியப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பணப் பலன்களை பெற பல வாய்ப்புகள் கிடைக்கும், பணத்தால் தடைப்பட்ட காரியங்களும் இக்காலக்கட்டத்தில் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் திட்டமிடுவீர்கள், இதனால் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர நம்பிக்கை மீண்டும் பலப்படும். சமூகப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு ராசி: மார்கழி மாத சூரியப் பெயர்ச்சியின் தாக்கத்தால், தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாகப் பெறுவார்கள், இதன் காரணமாக அனைத்து காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். பணியாளர்கள் இந்த காலகட்டத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதோடு, அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி பெறுவார்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இதன் காரணமாக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவீர்கள்.
மீன ராசி: சூரியனின் ராசி மாற்றத்தால், மீன ராசிகள் போதுமான அளவு பணம் சம்பாதிப்பதோடு, நிலம், வீடு வாங்கும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வார்கள். திட்டமிட்டு வேலை செய்வதன் காரணமாக, நிறைய பணம் சம்பாதிப்பதோடு சேமிக்கவும் முடியும். ஆண்டு இறுதியிலோ அல்லது புத்தாண்டின் தொடக்கத்திலோ சொந்த வீடு அல்லது மனையை வாங்கும் நிலை ஏற்படும். இந்த காலகட்டத்தில், பணியாளர்கள் தங்கள் சக ஊழியர்களை மிஞ்சி முன்னேறுவார்கள். இது உங்கள் ]செல்வாக்கையும் அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.