ஓய்வூதியம்: மக்களின் சராசரி வயது அதிகரித்து வருகிறது. அனைவரும் ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் இருப்பதையே விருப்புகின்றனர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பென்ஷன் இல்லாதவர்கள் சரியாக திட்டமிடுவது அவசியம்
தனியார் வேலை அல்லது தொழிலில் இருந்து ஓய்வு பெற உள்ளவர்கள் தங்கள் வாய்தான காலத்தில் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வருமானமாக கிடைக்கும் வகையில் திட்டனமிட்டு முதலீடு செய்ய வேண்டும்.
SIP என்னும் மியூச்சுவல் ஃபண்ட்: ஆயிரத்தை கோடிகளாக்கும் SIP என்னும் மியூச்சுவல் ஃபண்டில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம். பரஸ்பர நிதியம் சாமான்யர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கும் வல்லமை படைத்தது.
சராசரி ஆண்டு வருமானம்: பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக 12 - 15% சதவிகித ஆண்டு வருமானம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கூட்டு வருமானத்தின் பலன்கள் கிடைப்பதால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, மிகச்சிறந்த வருமானத்தை கொடுக்கும்.
பல சமயங்களில், சிறந்த பரஸ்பர நிதிய திட்டங்களில் முதலீடு செய்தல், 20% முதல் 30% வரை கூட ஆண்டு வருமானத்தை வழங்கியுள்ளன என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. முதலீட்டாளர்களை பணக்காரர்களாக்கிய மியூச்சுவல் ஃபண்டு பல திட்டங்கள் பல உள்ளன. இதனை தேர்ந்தெடுப்பதன் மூலம் பணக்கார கனவு எளிதாகும்.
எஸ்ஐபி மூலம் தொடர் முதலீடு: குறிப்பிட்ட காலம் வரை எஸ்ஐபி மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்து, ஒரு பெரிய நிதி கார்பஸை உருவாக்கிய நிலையில், ஓய்வுக்கு பிறகு, பணத்தை முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு, அதன் மூலம் உங்களுக்கு வழக்கமாக வருமானம் கிடைக்க உதவும் SWP என்னும் முறையான திரும்பப் பெறும் திட்டத்தை தொடங்கலாம்.
SWP திட்டம்: SIP திட்டத்தை போலவே, SWP என்னும் பணத்தை முறையாக திரும்பப் பெறும் திட்டம், மாதாந்திர ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு வழக்கமான வருமானத்தைக் கொடுக்கும் சிறந்த திட்டம். முறையான திரும்பப் பெறும் திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால், அதற்காக மியூச்சுவல் ஃபண்டின் சில யூனிட்களை விற்பனை செய்ய முன்பதிவு செய்ய வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் விற்பனை: முதலீடுகளில் இருந்து காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் பணத்தை எடுக்கலாம். முறையான திரும்பப் பெறுதல் திட்டம் உங்கள் முதலீடுகளை பராமரிக்கும் போது படிப்படியாக உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்பனை செய்ய உதவுகிறது. இது உங்கள் மற்ற போர்ட்ஃபோலியோவின் சந்தை செயல்திறனுக்கு ஏற்ப நிலையான வருமானத்தை வழங்குகிறது.
முதலீடு மூலம் கிடைக்கும் வருமானம்: ஒரே நேரத்தில் ஒரு பெரிய தொகையை திரும்பப் பெறுவதன் மூலம், எதிர்காலத்தில் உங்கள் முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு கை நழுவும். ஆனால், சீரான இடைவெளியில் பணத்தை எடுப்பதன் மூலம் உங்கள் முதலீடு மூலம் கிடைக்கும் வருமானம் தொடர்ந்து பெறப்பட்டு தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள்: SWP அதாவது முறையான திரும்பப் பெறுதல் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவது முக்கியம். உங்கள் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்கள் மாதாந்திர, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திரும்பப் பெறும் தொகையின் அடிப்படையில் விற்கப்படுகின்றன.
மாத வருமானம்: உதாரணத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 30,000, ரூ.50,000 அல்லது ரூ.60,000 என உங்களது தேவைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கிடைக்கும் வகையில், யூனிட்டுகளை விற்க நீங்கள் முடிவு செய்தால், அதன் அடிப்படையில் உங்கள் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதே மதிப்புள்ள யூனிட்கள் விற்கப்பட்டு, உங்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
பரஸ்பர நிதி முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்றாலும், எப்போதும் சிறந்த வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில், குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் உள்ளது. நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், இது தொடர்பாக உங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.