வாட்ஸ்அப் மீண்டும் முரண்டு பிடிக்கிறது. அரசின் சட்டங்களை மீறினால், நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின் நிலை, வாட்ஸ்அப் செயலிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
வாட்ஸ்அப்பின் பிடிவாதம் குறைவதாகவே தெரியவில்லை. வாட்ஸ்அப் செய்தி செயலி, மீண்டும் புதிய தனியுரிமைக் கொள்கையை பயனர்களுக்கு அனுப்பியுள்ளது. நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், சேதம் ஏற்படலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நிபந்தனையை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்? இதனால், பயனர்களுக்கு என்ன தீமை? வாட்ஸ்அப் என்ன பயனடையும்?
Also Read | கடந்த 6 மாதங்களில் உங்கள் Aadhaar card எங்கே, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது தெரியுமா?
வாட்ஸ்அப் மீண்டும் புதிய தனியுரிமைக் கொள்கையின் அறிவிப்புகளை பயனர்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளதாக, தொழில்நுட்ப தளமான telecomtalk கூறுகிறது.
புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாட்ஸ்அப் பயனர்களிடம் தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தைப் போலவே, இந்த முறையும் பயனர்களுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் விருப்பத் தெரிவு வழங்கப்படவில்லை.
அந்த அறிக்கையின்படி, புதிய விதிமுறைகளை பயனர் ஏற்க வேண்டும் என்று வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியுள்ளது. நீங்கள் இதைச் செய்யாவிட்டால், வாட்ஸ்அப்பில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்ந்து வரும். ஆனால் பயனர்கள் செய்தியைப் படிக்க முடியாது. இது தவிர, செய்திகளை அனுப்பும் விருப்பமும் நிறுத்தப்படலாம்.
இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, வாட்ஸ்அப் (WhatsApp) இதேபோன்ற தனியுரிமைக் கொள்கையை பயனர்களுக்கு அனுப்பியது. இதில், பயனர்களின் உரையாடல்கள், தொடர்பு தகவல்கள், பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) உடன் பகிரப்படும் என்று கூறப்பட்டது.
பிற தளங்களுடன் மக்களின் தரவைப் பகிர்வது பற்றி வாட்ஸ்அப் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பயனர்கள் பிற செயலிகளை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். வாட்ஸ்அப்பின் இந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகெங்கிலும் உள்ள பயனர்கள் இப்போது டெலிகிராம் (Telegram) மற்றும் சிக்னல் (Signal) பயன்படுத்துகின்றனர்.