திருமணத்திற்கு முன்பு உங்கள் பார்ட்னரிடம் கூற வேண்டிய 7 உண்மைகள்! என்னென்ன தெரியுமா?

Important Things That You Should Discuss With Your Partner : திருமணம் செய்து கொள்ளும் முன்பு உங்கள் வருங்கால வாழ்க்கை துணையிடம் சில முக்கிய கேள்விகளை கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். 

Important Things That You Should Discuss With Your Partner : பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமாக இருந்தாலும் நீங்கள் கரம் பிடிக்க இருக்கும் ஆளிடம் சில விஷயங்களை முன்னரே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான், நாளை திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தாலும் அதை இருவரும் எதிர்த்து போராட அந்த உறவு நிலையானதாக இருக்கும். அப்படி, திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரும் என்னென்ன உண்மைகளை தெரிவித்துக்கொள்ள வேண்டும் தெரியுமா? 

1 /7

உங்களின் நிதி நிலை:  நீங்கள் நிதி ரீதியாக எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்திவிட வேண்டும். உங்களுக்கு இருக்கும் கடன், சேமிப்புகள், வருவாய், செலவழிக்கும் பழக்கங்கள் என அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். நிதி ரீதியாக இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக கூறிவிட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.   

2 /7

குடும்ப நிலை:   உங்கள் குடும்பத்துடன் உங்களுக்கு எந்த மாதிரியான பிணைப்பு இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். உங்கள் பார்ட்னர், குடும்பத்தில் எவ்வளவு பெரிய அங்கமாக இருக்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டும்.   

3 /7

கனவுகள்:    இன்னும் 5 அல்லது 10 வருடத்தில் உங்களை நீங்கள் எந்த இடத்தில் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் பார்ட்னரிடம் தெரிவிக்க வேண்டும். உங்கள் கனவுகள், அவர்களின் வாழ்வுடன் ஒத்துப்போகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

4 /7

குழந்தைகள் குறித்த பேச்சு:    திருமணம் ஆனவுடன் குழந்தைகள் வேண்டுமா, அல்லது இன்னும் சில ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

5 /7

உடல் நலன் சார்ந்த விஷயங்கள்:    உங்களுக்கு உடல் நலனில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நாள்பட்ட நோய் பாதிப்பு இருந்தால் அதனை தாராளமாக உங்கள் வருங்கால துணையிடம் தெரிவிக்கலாம். 

6 /7

எல்லைக்கோடுகள்:    இருவரின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை மீதான உங்கள் பார்வை உள்ளிட்டவற்றை இருவரும் பேசிக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, உங்களுக்கான தனிப்பட்ட பிரவைசி குறித்தும் உறவின் எல்லைக்கோடுகள் குறித்தும் பேச வேண்டும்.

7 /7

சண்டைகள்:    இருவரும் கடினமான தருணங்களை எப்படி எதிர்கொள்வீர்கள், சோகமான நேரங்களில் என்ன செய்வீர்கள் என்பதை இருவரிடத்திலும் பேசிக்கொள்ள வேண்டும். இது, வருங்காலத்தில் உறவில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.