Pushpa 2 Box Office Collection Day 6 : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம், உலகளவில் நல்ல வெற்றியை பெற்ற படமாக இருக்கிறது. இந்த படத்தின் 6ஆம் நாள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Pushpa 2 Box Office Collection Day 6 : சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று வெளியான படம், புஷ்பா 2 : தி ரூல். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை, உலகளவில் ரசிகர்கள் பெரிய ஹிட் ஆக்கியிருக்கின்றனர். ஷாருக்கான், பிரபாஸ் எல்லாம் செய்யாத சாதனையை தற்போது அல்லு அர்ஜுன் செய்து காண்பித்திருக்கிறார். இந்த படம், 6 நாட்களிலேயே 1000 கோடி வசூலை தாண்ட இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கும் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் படம், புஷ்பா 2: தி ரூல். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருக்கிறார். இந்த படம், இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
புஷ்பா படத்தின் முதல் பாகமான, புஷ்பா 1: தி ரைஸ் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. அது மட்டுமன்றி இதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன.
புஷ்பா 1 படம் நன்றாக இருந்ததால், அதற்கு அடுத்த பாகமான புஷ்பா 2 படம் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, இப்படம், இந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது.
புஷ்பா 2 படம், ஆந்திரா, தெலங்கானா மட்டுமன்றி, தமிழ் நாடு, கேரளா, வட இந்தியாவின் பல இடங்கள் என பட்டித்தொட்டியெங்கும் பட்டையகிளப்பி வருகிறது.
இரண்டு நாட்களிலேயே கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டி வசூலித்த புஷ்பா 2 திரைப்படம், தற்போது 1000 கோடியை தொட இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் இந்த படம், ரிலீஸான 5 நாட்களுக்குள்ளாகவே 922 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
6ஆம் நாளான இன்று, புஷ்பா 2 : தி ரூல் படம் 1000 கோடியை தாண்டி விடும் என அடித்து கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படங்கள் கூட, இவ்வளவு அதிவேகமாக 1000 கோடியை வசூலித்ததில்லை.