ஜனவரி 3 முதல் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடம் திட்டம் தொடங்கியது. அதன்படி உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன, அதற்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
முதலில் gov.in இணையதளத்திற்கு செல்லவும். நீங்கள் COWIN பதிவு செய்யவில்லை என்றால் முதலில் பதிவு செய்ய வேண்டும்.
இங்கு குழந்தையின் பெயர், வயது போன்ற சில தகவல்களை கொடுக்க வேண்டும். பதிவு செய்து முடிந்ததும், உங்கள் மொபைலில் உறுதிப்படுத்தல் செய்தி வரும். பின்னர் உங்கள் பகுதியின் பின் குறியீட்டை உள்ளிடவும். தடுப்பூசி மையங்களின் பட்டியல் உங்கள் முன் வரும்.
இதை செய்த பிறகு, தடுப்பூசி (Corona Vaccine) மையத்திற்குச் சென்று உங்கள் குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி போட முடியும்.
தடுப்பூசி மையத்திற்குச் செல்வதற்கு முன், நீங்கள் அடையாளச் சான்று மற்றும் ரகசியக் குறியீட்டை வழங்க வேண்டும்.