மூக்குப் பிடிக்க சாப்பிட்ட பின்னரும்... கொடூரமாக பசிக்கிறதா... இந்த 5 காரணங்களாக இருக்கலாம்!

Health Tips In Tamil: சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையாக பசி எடுக்கும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு பின்னால் பொதுவாக இருக்கும் 5 காரணங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

வயிறு நிறைய சாப்பிட்டும் சிலருக்கு இந்த பிரச்னை ஏற்படும். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே கடுமையாகவும் பசியெடுக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

1 /8

பலரும் இரவில் 9, 10 மணிக்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவீர்கள். அப்போது இரவு 11 மணிக்கே மீண்டும் பசியெடுக்கும். வீட்டில் சாப்பிடுவதற்கு என எதுவும் இருக்காது. அந்த நேரத்தில் பலரும் ஆன்லைனில் ஆர்டர் செய்வார்கள், அல்லது வீட்டு அடுப்பங்கரையில், பிரிட்ஜில் சாப்பிடுவதற்கு எதுவும் இருக்கிறதா என்றும் பார்ப்பார்கள்.   

2 /8

இது பொதுவாக பலரிடத்திலும் காணப்படும் ஒன்றாகும். அந்த வகையில், பொதுவாக இதற்கு காணப்படும் 5 காரணங்களை விரிவாக காணலாம்.   

3 /8

மன அழுத்தம்: கடுமையான மன அழுத்தத்தில் இருப்பது பசி ஹார்மோன்களை பாடாய்படுத்தும். இதனால் சாப்பிட வேண்டும் என தோன்றும், சாப்பிட்ட பின்னரும் பசியெடுக்கும். இதற்கு என்ன காரணம் என்றால் மன அழுத்தத்தில் இருக்கும்போது கார்ட்டிசோல் என்ற பசியை தூண்டும் ஹார்மோன் சுரக்கும். இதனால் அதிகம் சாப்பிட வேண்டும் என தோன்றும்.   

4 /8

தூக்கமின்மை: சரியான தூக்கமில்லை என்றாலும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும். சரியாக தூங்காவிட்டால் Ghrelin என்ற பசியை தூண்டும் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதேபோல் போல் பசியை அடக்கும் Leptin ஹார்மோன் குறைவாகவே சுரக்கும்.  சமச்சீரற்ற இந்த ஹார்மோன் பசியை அதிகரிக்கச் செய்யும்.   

5 /8

குறைவான நீர்ச்சத்து: நீர்ச்சத்து குறைவுக்கூட பசியை எதிகரிக்கச் செய்யும். உங்கள் உடலுக்கு போதுமான நீர் நிலை என்றால் தாகத்திற்கும், பசிக்கும் வித்தியாசம் தெரியாது. இது தேவையற்ற உணவுகளை உண்ண வழிவகை செய்யும். செரிமானத்தை மெதுவாக்கி விரைவாக பசியையும் தூண்டும்.    

6 /8

வேகமாகச் சாப்பிடுதல்: வேகமாகச் சாப்பிடுவதும் இந்த பிரச்னைக்கு வழிவகுக்கும். காரணம் நீங்கள் வேகமாக சாப்பிடுவதால் எதை சாப்பிடுகிறீர்கள் என்பது மூளையில் பதியாது. இதனால் வயிறு நிறைவு ஏற்படாது. எனவே, நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள். வேகமாக சாப்பிடுவது செரிமானத்தையும் கெடுக்கும். இதனாலும் அதிகம் சாப்பிட வேண்டும் என தோன்றலாம்.  

7 /8

அதிக உப்பு கொண்ட உணவு: இந்த உணவுகளும் அதிக பசியை தூண்டும். அதிகமாக சோடியத்தை எடுத்துக்கொள்வது உடலின் இயற்கையான தாகம் எடுக்கும் உணர்வை மட்டுப்படுத்தும். இதனால் நீர்ச்சத்து குறைந்து, பசி அதிகரிக்கும். இந்த உணவுகளில் ஊட்டச்சத்துக்களும் இருக்காது. இதனால், வயிறு நிறைவும் ஏற்படாது, அதிகம் சாப்பிட வேண்டும் என தோன்றும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை செய்வது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.