சிக்குனு எடை, சின்னதா தொடை, இஞ்சி இடுப்பு, வயிற்றில் நோ மடிப்பு: இந்தாங்க டிப்ஸ்

Weight Loss Tips: உடல் பருமன் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. உலக அளவில் அதிக அளவிலான மக்கள் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Weight Loss Tips: தொப்பை கொழுப்பு (Belly Fat) பிரச்சனையும் இந்நாட்களில் பலரிடம் பரவலாக காணப்படுகின்றது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேருவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையாக உழைத்தாலும் பலருக்கு உடல் எடையை குறைக்க முடிவதில்லை. எனினும் சில எளிய இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /8

அனைவருக்கும் பொதுவாக எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதைக் குறைப்பது பிரம்ம பிரயத்னமாகவே இருக்கின்றது. உணவை உட்கொள்ளாமல் இருந்தாலோ, அல்லது குறைவாக உட்கொண்டாலோ உடல் எடை குறைக்கலாம் என எண்ணுகிறார்கள். ஆனால் இது மிகவும் தவறான கருத்தாகும்.

2 /8

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும் அதை சரியான அளவில் சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். எடை இழப்புக்கு சரியான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும். உடல் எடை குறைப்பதற்கான சில எளிய இங்கே காணலாம்.

3 /8

உடல் எடையை குறைக்க நம் வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் பல வித மாற்றங்களை செய்ய வேண்டும். இதனுடன் தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகாசனம் போன்ற ஏதாவது ஒரு வகையான உடற்பயிற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். எடை குறைக்கும் முயற்சியில் உடல் செயல்பாடு மிக முக்கியமானதாகும்.

4 /8

தொப்பை கொழுப்பை கரைக்க நம் எடை இழப்பு டயட்டில் முழு தானியங்கள் இருக்க வேண்டியது மிக அவசியம். இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதோடு பலவித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இவை நமக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதனால் தேவையற்ற ஆரோக்கியமாற்ற உணவை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது

5 /8

தயிரால் உணவின் சுவை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைப்பதிலும் உதவி கிடைக்கிறது. இதனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பலவித நன்மைகள் கிடைக்கின்றன. இதில் அதிகப்படியான புரதச்சத்து, கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவற்றுடன் இதில் போதுமான அளவு நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தி எடை குறைப்பில் உதவுகிறது.

6 /8

ப்ரோக்கோலி, பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகளையும் வெந்தயக் கீரை, பாலக் கீரை போன்ற கீரை வகைகளையும் கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும். இவற்றில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இவை நம் வயிற்றை நிரம்பிய உணர்வோடு வைத்திருப்பதோடு எடை இழப்பிலும் உதவுகிறது.

7 /8

கிரீன் டீயில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள சேர்மன்கள் உடல் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றன. பால் மற்றும் சக்கரை கலந்த தேநீருக்கு பதிலாக தினமும் கிரீன் டீ குடிக்கலாம்.

8 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.