ராகு கேது பெயர்ச்சி 2025... இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கு

Rahu Ketu Transit 2025: சர்ப்ப கிரகங்களான ராகு-கேது எப்போதும் எதிர் திசையில், அதாவது வக்ர நிலையில் தான் நகர்கின்றனர்.  இந்நிலையில், 2025ம் ஆண்டு ராகு நடைபெற உள்ள ராகு - கேது  பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும்.

ராகு - கேதுவின் பெயர்ச்சியால், பல ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. என்கின்றனர் ஜோதிடர்கள். ராகு கும்ப ராசியிலும், மேது சிம்ம ராசியிலும் நுழையும் போது, ​​மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

1 /8

ராகு - கேது அசுப கிரகங்களாக  கருதப்படுகின்றன. எனினும், எந்த ஒரு கிரகமும் 100 சதவீதம் நன்மை அல்லது தீமை செய்யக்கூடியன அல்ல என்கின்றது ஜோதிட சாஸ்திரங்கள். கிரகங்களில் நிலை, அவை அமர்ந்திருக்கும் இடம், பெயர்ச்சியினால் ஏற்படும் கிரக சேர்க்கை ஆகியவற்றை பொறுத்து சில ராசிகளுக்கு நன்மை அல்லது தீமை விளையும். 

2 /8

ராகு கேது பெயர்ச்சி 2025: சர்ப்ப கிரகங்களான ராகு - கேது மே மாதம் 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு பெயர்ச்சியாக உள்ளனர். ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் மாற உள்ளதால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளை என தெரிந்து கொள்வோம்.  

3 /8

மேஷ ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியினால் வேலையில் வருமானம் கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

4 /8

மிதுன ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால், எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். உங்கள் தைரியமும் மன உறுதியும் அதிகரிக்கும். உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். இத்துடன் பணியிடத்திலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் மரியாதை கிடைக்கும். தவிர, உங்களை வாட்டி வந்த நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் காலம் தொடங்கும்.

5 /8

கடக ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால்,  தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி பெறும். வேலையில், தொழிலில், புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இது முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.  பண விஷயத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் வெற்றியின் ஒரு புதிய காலகட்டம் தொடங்கும். மேலும், பதவி உயர்வு சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது.

6 /8

கன்னி ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால்,  சிறப்பான பலன்கள் கிடைக்கும், பழைய கடன்களில் இருந்து விடுபடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் காலக்கட்டத்தில் வாட்டி வந்த நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வேலை செய்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும்.

7 /8

துலாம் ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால்,   ஆரோக்கியம் மேம்படும். உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும். மொத்தத்தில், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.