உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைப் பேரணியில் கலந்துக் கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Pictures Courtesy: ANI
மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் சவாரி செய்த மோடி, விமான நிலையத்திலிருந்து காந்திநகரில் உள்ள பாஜகவின் மாநிலத் தலைமையகம் வரை தனது சாலைப்பேரணியை நடத்தினார். சாலையோரம் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொணடர்களுக்கு பிரதமர் கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைப் பேரணியில் கலந்துக் கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள் இவை...
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
சாலைப் பேரணி வெற்றிப் பேரணி
மோடி - அமித் ஷா வெற்றிக் கூட்டணி
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிற மீதமுள்ள 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தல் முடிவு வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரதமர் அரியாசனம் யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் ஒன்றாகவே அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது