India National Cricket Team: நடந்துமுடிந்த உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அவருக்கு பதில் இந்த வீரரை இந்திய அணி ஒருநாள் அரங்கில் பயன்படுத்தலாம். அதன் காரணங்களை இதில் காணலாம்.
உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. இந்திய அணி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பலமாக இருந்தாலும் கோப்பையை வெல்ல இயலவில்லை.
ஹர்திக் பாண்டியாவின் காயம் ஒரு பின்னடைவாக பார்க்ப்பட்டது. அவருக்கு மாற்று வீரராக வந்த சூர்யகுமார் யாதவ் இறுதிப்போட்டியில் இந்திய அணி (Team India) பேட்டிங்கின்போது சரியாக ஃபினிஷ் செய்யவில்லை.
சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 35 இன்னிங்ஸ்களில் மொத்தம் 773 ரன்களை எடுத்துள்ளார். 4 அரைசதங்கள் உள்பட அதிகபட்சமாக 72 ரன்களை அடித்திருக்கிறார்.
டி20 ஸ்பெஷலிஸ்டாக பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவுக்கு பதில் இனி ஒருநாள் அரங்கில் ரின்கு சிங்கை (Rinku Singh) பரிசோதித்து பார்க்கலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.
தோனிவிட்டுச் சென்ற அந்த ஃபினிஷர் ரோலை ரின்கு சிங் ஒருநாள் அரங்கில் சிறப்பாக செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் (IND vs AUS T20) கூட அவர் ஆட்டத்தை சிறப்பாக முடித்துக்கொடுத்தார்.
அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் டி20 அணியில் ரின்கு சிங் கண்டிப்பாக இடம்பெறுவார். எனவே, அவரை அப்படியே ஒருநாள் தொடரிலும் (IND vs SA ODI Squad) அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.
ரின்கு சிங் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்தால் மிடில் ஆர்டரில் ஒரு நிலையான இடதுகை பேட்டர் என்ற இந்திய அணி நீண்ட நாள் தேவை நிறைவேறும்.