குபேரரின் அருளை பரிபூரணமாக பெறும் சில அதிர்ஷ்ட ராசிகள்... வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது

வாழ்க்கையில் செல்வம் நிறைந்திருக்க, பணத்தட்டுப்பாடு என்பதே இல்லாத நிலை நீடிக்க,  மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக தேவை என்பதோடு, செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் குபேரரின் அருளும் தேவை என்று கூறுவார்கள்.

வீட்டில் வளங்களும் செல்வமும் நிறைந்திருக்க மகாலட்சுமியுடன் குபேரரையும் சேர்த்து வழிபடுவது வழக்கம். குபேரரின் அருள் இருந்தால், வாழ்க்கையில் செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது. பணம் மட்டுமல்ல வீட்டில தானியமும் எப்போதும் நிறைந்திருக்கும்.

1 /7

குபேரர்: இந்து மதத்தில் செல்வத்தின் கடவுளாக கருதப்படும் குபேர பகவானின் அருள் கிடைத்தால் போதும். வாழ்க்கையில் எந்தவித கஷ்டமும் இல்லாமல், ஆடம்பரமாக சந்தோஷமாக வாழ்க்கையில் வாழலாம். அந்த வகையில், பகவான் குபேரரின் ஆசியுடன், மகாலட்சுமியின் அருளையும் பரிபூரணமாக பெற்ற சில அதிர்ஷ்ட ராசிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

2 /7

ரிஷபம்: குபேரன் சுக்கிரன் மகாலட்சுமி ஆகியோரின் ஆசிகள் பெற்ற ராசி ரிஷப ராசி. ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், இவர்கள் வீட்டில் எப்போதும் பணமும் தானியங்களும் நிறைந்து இருக்கும். தாங்கள் சந்திக்கும் சவால்களை எளிதாகக் கடந்து வெற்றியை நிலைநாட்டும் திறன் பெற்றவர்கள்.

3 /7

கடகம்: கடுமையாக உழைக்கும் திறனை பெற்ற கடக ராசியினர், குபேரரின் ஆசியை பரிபூரணமாக பெற்றவர்கள். கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனைப் போலவே நட்புணர்வு கொண்ட இந்த ராசிகள், தங்கள் விடாமுயற்சியின் பயனாக வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கிறார்கள்.

4 /7

துலாம்: சுக்கிரன் ஆட்சி செய்யும் துலா ராசிக்காரர்கள், செல்வம் புகழ் ஆகியவற்றை குறையில்லாமல் பெறுவார்கள். குபேரனின் எல்லையற்ற அருளை பெற்ற இவர்களுக்கு, வாழ்க்கையில் பணம் தட்டுப்பாடு என்பது இருக்காது. மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக உண்டு.

5 /7

விருச்சிகம்: எல்லா வகையிலும் திறமைசாலியாக இருக்கும் விருச்சிக ராசியினருக்கு, குபேரனின் அருள் எப்போதும் உண்டு. இவர்கள் தங்கள் தேவை மட்டுமல்லாமல், தங்கள் சார்ந்து இருப்பவர்களின் தேவையும் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

6 /7

தனுசு: எதிர்காலத்தைப் பற்றி நேர்மறை சிந்தனை கொண்ட இவர்களுக்கு, குபேரன் எல்லா வகையிலும் அருளைப் பொழிகிறார். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். மற்றவர்களுக்கு உதவ தயக்கம் காட்டாமல், ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டும் இவர்களுக்கு செல்வவளம் எப்போதும் நிறைந்திருக்கும்.  

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.