சுக்கிரன் சஞ்சாரம் என்பது தன்னுடைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு அல்லது ராசிக்கு இடம் பெயர்வதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலமாக மாறப்போகிறது.
சுக்கிரன் சஞ்சாரத்தின் காரணமாகக் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மனக்கசப்புகள் வரத்தொடங்கும் என சொல்லப்படுகிறது. நிதியில் எதிர்ப்பார்க்காத பிரச்சனைகள் நிகழும், மாறாக கஷ்டங்கள் உண்டாகும். நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் பெரிதாக ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
மிதுன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். பண பற்றாக்குறை, குடும்ப சிக்கல் உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. மேலும் உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
சுக்கிரன் பகவான் மிதுன ராசியில் இடம்பெயர்வதால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில்மகிழ்ச்சியான செய்தி வரும் எனக் கூறப்படுகிறது. திருமணம், காதல், குடும்ப வாழ்க்கை மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் மகிழ்ச்சி குறையும் என்று சொல்லப்படுகிறது.
கும்ப ராசிக்காரர்களே சுக்கிரன் இடம் பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமானம் போன்றவற்றில் உன்னிப்பான கவனம் செலுத்துவது நல்லது. இந்த ராசிகள் தவறான விதத்தில் பணம் சம்பாதிக்க முயல வேண்டாம். மீறி முயன்றால் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும்.
மகர ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் பலவித புது சவால்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் பணியிடத்தில் சில வாக்குவாதம் நிகழலாம். நீங்கள் வங்கி அல்லது யாராவது ஒருவரிடம் கடன் வாங்க முயலாதீர்கள். உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்தால் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும்.
கடக ராசிக்காரர்கள் தங்களின் நிதி பிரச்சனைகளில் பல சிக்கல் ஏற்படும். சுக்கிரன் பெயர்ச்சியால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு பண பற்றாக்குறை வரலாம். வீண் செலவுகள் செய்வதை குறைத்து கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.