பணத்தால் விசுவாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது என பத்திரனா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக ஸ்டார் பிளேயர்களுக்கு ஐபிஎல் அணிகள் தூதுவிட்டுக் கொண்டிருக்கின்றன
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற அணிகளில் இருக்கும் நல்ல பிளேயர்களை குறிவைத்து தூக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறது.
அதில் அண்மையில் சிக்கியவர் தான் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸூக்கு திரும்பியுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக நல்ல பிளேயர்களுக்கு தூதுவிடுகிறது மும்பை. குறிப்பாக சென்னை அணியில் இருக்கும் பத்திரனாவுக்கும் ஆஃபர் சென்றிருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளரான மலிங்கா மூலம் இந்த ஆஃபர் சென்றிருக்கிறது. இருவரும் ஒரே நாடு என்பதால் மலிங்கா இதனை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த அசைக்கெல்லாம் மசியாத பத்திரனா மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஃபரை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் தான் எப்போதும் விசுவாசமாக சென்னை அணிக்கு தான் இருப்பேன் என சமூக ஊடக்கத்தில் வெளிப்படையாக மதீஷா பத்திரான தெரிவித்துள்ளார்.
அதில் பணத்தால் விசுவாத்தை எப்போதும் வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மும்பை அணியின் பின்பக்க முயற்சி தோல்வி அடைந்துள்ளது.