LIC Policy: உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து ஒளிமயமாக்கும் 5 சிறந்த காப்பீட்டுத் திட்டங்கள்!!

வழக்கமாக, சேமிப்பு என்று வரும்போது, ​​பெரும்பாலானோர் அரசாங்க திட்டங்கள் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். நிச்சயமாக, சேமிப்பு மற்றும் முதலீடு கடினமான காலங்களில் நமக்கு உதவுகின்றன.  குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன. எதிர்காலத்தில் உங்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கக்கூடிய எல்.ஐ.சியின் அப்படிப்படட் சில திட்டங்களைப் பற்றி காணலாம்.  

1 /5

LIC -ன் ஜீவன் அமர் திட்டம் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கானது. பாலிசியின் மச்சூரிட்டி வயது அதிகபட்சம் 80 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி வாடிக்கையாளருக்கு மரணம் வரை ஆயுள் பாதுகாப்பு அளிக்கிறது. பாலிசி காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் ஆகும். புகைபிடிப்பவர்களும் இந்த பாலிசியில் கவர் செய்யப்பட்டுள்ளனர். 

2 /5

LIC –ன் இந்த திட்டத்தில், பாலிசி முதிர்ச்சியில் பெரும் தொகை கிடைக்கும். பாலிசி முடிவதற்குள் வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கும். பாலிசிதாரர் LIC –ன் லாபத்திலும் பங்கேற்கிறார். பாலிசியில் பரிந்துரைக்கப்பட்டவர் இறுதி கூடுதல் போனஸைப் பெறுவார். 

3 /5

இது LIC –ன் மிக சக்திவாய்ந்த பாலிசியாகும். இந்த பாலிசி 100 வயது வரை பாதுகாப்பு அளிக்கிறது. பாலிசியின் காலம் முடிந்தாலோ, அல்லது காப்பீட்டாளரின் மரணம் ஏற்பட்டாலோ, குடும்பத்திற்கு பாலிசியின் மொத்த தொகை கிடைக்கும். 

4 /5

LIC -ன் இந்தக் பாலிசியில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் முதலீடு செய்யலாம். பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ .1 லட்சம் உறுதி செய்ய (Sum Assured) வேண்டியது அவசியம். நியூ ஜீவன் ஆனந்த் பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினிக்கும் உத்தரவாதம் மிக்க மற்றும் ஒருங்கிணைந்த போனஸ் கிடைக்கும். பாலிசிதாரர் பாலிசியின் முழு காலத்திற்கும் உயிரோடிருந்தால், அவருக்கு டெபாசிட் போனஸுடன் உத்தரவாதமான அசல் தொகையும் வழங்கப்படும்.

5 /5

Tech Term plan ஒரு pure risk premium plan ஆகும். LIC -ன் இந்த ஆன்லைன் டர்ம் பாலிசி, ஆஃப்லைன் பாலிசிகளை விட மலிவானது. பாலிசி முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னர் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், பாலிசியின் தொகை குடும்பம்பத்திற்குக் கிடைக்கிறது.  பாலிசியின் கொள்கை காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையாகும்.