Vaadivaasal Movie Heroine : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் அத்காரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த தகவலும் பரவி வருகிறது.
Vaadivaasal Movie Heroine : கங்குவா படத்தில் ஃப்ளாப் கொடுத்தாலும், அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க தயாராகி வரும் நடிகர், ரெட்ரோ படத்தை முடித்து விட்டு, அடுத்து சூர்யா 45 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் இவர், வெற்றிமாறனுடன்‘வாடிவாசல்’ படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கும் இந்த நேரத்தில், இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆண்டில், சூர்யாவின் 2 படங்கள் வெளியாக இருக்கின்றன. இவை இரண்டுமே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர்களின் படங்களாகும். இதற்கெல்லாம் முன்னரே சூர்யா கமிட் ஆன படம், வாடிவாசல்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஏறு தழுவுதலை மையமாக வைத்து, வாடிவாசலின் கதை எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தில், சூர்யா மாடுபிடி வீரராக நடிக்கிறார்.
வாடிவாசல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாட்டுப்பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்த அறிவிப்பினை, தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிட்டிருந்தார்.
ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த வெற்றிமாறன்-சூர்யாவி கூட்டணி, ஒரு வழியாக இணைவதை அடுத்து அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வாடிவாசல் படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த விவரம், தற்போது வெளியாகியுள்ளது. அவர், வேறு யாரும் இல்லை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்த ஐஸ்வர்யா லட்சுமிதான்.
இவரை முதன்முதலில் விஷாலின் ஆக்ஷன் படத்தில் பார்த்திருப்போம். இதையடுத்து, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1-2 உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.
34 வயதாகும் ஐஸ்வர்யா, தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் வாடிவாசல் படத்தில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.